லிம்பெடிமா எனும் நிணநீர் மண்டல பாதிப்பிற்குரிய நவீன பரிசோதனை

13 Feb, 2024 | 04:55 PM
image

இன்றைய சூழ்நிலையில் எம்முடைய பெண்மணிகளுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகிய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டிருப்பார்கள். இதன் போது சிலருக்கு பக்க விளைவாக இடது கை மற்றும் இடது கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் லிம்படிமா என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை துல்லியமாக அவதானிக்க நவீன பரிசோதனை முறை அறிமுகமாகி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

லிம்பெடிமா என்பது எம்முடைய உடலில் உள்ள நிணநீர் மண்டலத்தின் வழியாக வெளியேற்றப்படும் புரதம் நிறைந்த திரவம்  இயல்பான அளவைவிட அதிகமாக திரள்வதால் ஏற்படும் திசு வீக்க பாதிப்பை குறிக்கிறது. இது பொதுவாக கை, கால், விரல்கள் ஆகிய பகுதிகளைப் பாதிக்கிறது. சிலருக்கு மார்பின் சுவர் பகுதி, வயிறு, கழுத்து மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளிலும் ஏற்படக்கூடும்.

புற்றுநோய் சிகிச்சையை மேற்கொள்ளும் போது உங்களுடைய நிணநீர் மண்டலத்தின் முனைகள் அல்லது முடிச்சுகள் சேதப்படுத்தப்பட்டால்  இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு நிண நீர் திரவத்தின் வடிகால் பகுதிகளில் ஏதேனும் சிக்கல்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்பட்டாலும் இத்தகைய லிம்பெடிமா பாதிப்பை உண்டாக்கும். மேலும் தோலில் பாதிப்பு, தோல் தொற்று, மூட்டுகளை நகர்த்த இயலாத தன்மை, எலும்பு முறிவு போன்றவையும் ஏற்படக்கூடும்.

கை, கால், விரல்கள் அல்லது ஒரு பகுதி வீக்கம் அடைவது, வீக்கம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் இறுக்கமான உணர்வை உணர்வது, உடல் இயக்கத்தை கட்டுப்படுத்துவது போல் தோன்றுவது, மீண்டும் மீண்டும் தொற்று பாதிப்பு உருவாதல், தோலின் தன்மை மாற்றம்... ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

இதன் போது மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட், சி டி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை பரிந்துரைப்பர். சிலருக்கு நிணநீர் மண்டலத்தின் பாதிப்பினை துல்லியமாக அவதானிக்க லிம்போசிண்டிகிராபி ( Lymphoscintigraphy) எனும் பிரத்யேக நவீன பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இதனை மருத்துவ மொழியில் சென்டினல் லிம்ப் நோடு பயாப்ஸி ( Sentinel lymph node biopsy) என்றும் குறிப்பிடுவர். இந்த பரிசோதனையின் போது பயன்படுத்தப்படும் பிரத்யேக வண்ணம்.. உங்களுடைய நிணநீர் மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்தப்பட்டு அதனை ஒரு இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்து நிண நீர் நாளங்கள் மற்றும் நிணநீர் நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை துல்லியமாக அவதானிக்க இயலும்.

இதனைத் தொடர்ந்து கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ், சீக்வன்சியல் நியூமேடிக் பம்ப் போன்ற பிரத்யேக உறை மற்றும் ஆடைகளின் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதனுடன் பிரத்யேக உடற்பயிற்சியையும் வழங்கி நிவாரணத்தை தொடர்வர். நவீன பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானிக்கப்பட்ட நிணநீர் நாள வீக்கத்தை அகற்றி நிவாரணம் வழங்குவர். வேறு சிலருக்கு இத்தகைய கை கால் வீக்கத்தின் பாதிப்பை குறைப்பதற்காக நவீன முறையிலான மைக்ரோ வாஸ்குலர் சர்ஜேரி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டும் முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

டொக்டர் அனீஸ்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29