தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு இணக்கமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் - சிறிநேசன்

13 Feb, 2024 | 05:06 PM
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு ஒரு இணக்கமான முறையில் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

நாங்கள் பதவிக்காக அடிபடாமல் அதகைய சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்வதற்கா ஒரு இணக்கமான ஒரு விடையம் எட்டப்பட்டிருக்கின்றது.

இதனை எமது ஆதரவாளர்கள் பலருடன் பேசி பின்னர் அதுதொடர்பில் கருத்துக்களை வெளியிடுவோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்காகப் போட்டியிட்டவரும், அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் திங்கட்கிழமை (12 ) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்  

எமது கட்சிக்குள் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் சிறிநேசன் மற்றும் குகதாசன் ஆகியோருக்கு அப்பால் கட்சிக்காக நாங்கள் சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும். 

நாங்கள் வேறு கட்சிக்குள்ளிருந்து மாறி மாறி இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் வரவில்லை நாம் எமது பாரம்பரையிலிருந்து பின்பற்றி வருகின்ற இக்கட்சிதான் இது.

எமக்கு இதுதொடர்பில் முதிர்ச்சியும், ஒரு நீண்டகாலப் பயணமும் இருக்கின்றது. இதனால் நாங்கள் கட்சியில் பதவிகளைக் கேட்பதில் எதுவித தவறுமில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களே! நீங்கள் எங்களது கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றீர்கள் உங்களிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக் கேட்பார்கள் அப்போது நீங்கள் உண்மையான சரியான பதில்களைச் சொல்கின்றபோது நானும் இவ்வாறு அடிக்கடி இவ்வாறு ஊடக சந்திப்புக்களைச் செய்யவேண்டிய நிலைமை ஏற்படாது. 

சிலருக்கு ஊடகங்களைப் பார்க்கின்றபோது பல விடையங்களைப் பேசவேண்டும் என்ற எண்ணம் வருவதுண்டு, என்னைப் பொறுத்தவரையில் எந்த விடையங்களைப் பேசவேண்டும் என்ற கட்டுப்பாட்டோடுதான் ஊடகங்களுக்கு முன்னால் பேசுகின்றேன்.

எனவே கட்சி என்ற விடையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களும், நாங்களும் ஒன்றாகப் பயணிக்க வேண்டியவர்கள். எனவே நாம் கவனமாக ஊடகங்களுக்கு முன்னால் பேசும் நாகரீகத்தைப் பேணவேண்டும். 

செயலாளர் தெரிவிற்காக மீண்டும் மீண்டும் பொதுச் சபையைக் கூட்டடி வாக்காளர்களுக்குச் சலிப்புத் தன்மையை ஏற்படுத்துவதா? என்ற கேள்வி எழுகின்றது.

எனவே பொதுச் செயலாளர் பதவிக் காலத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆதரவாளர்களிடத்தில் இருக்கின்ற காரணத்தினால் நாம் ஒற்றுமையாக முடிவெடுத்துச் சரியான இணக்கப்பாட்டிற்கு வருவோம். விரைவில் அதனை மக்கள் அறிவார்கள், என அவர் இதன்போது தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி...

2024-12-10 09:16:17
news-image

இன்றைய வானிலை 

2024-12-10 06:56:10
news-image

உதயங்க வீரதுங்க - கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா...

2024-12-10 06:19:13
news-image

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான...

2024-12-10 02:33:23
news-image

பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள்...

2024-12-10 02:14:11
news-image

அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து...

2024-12-10 02:11:03
news-image

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு...

2024-12-10 02:07:37
news-image

மனித உரிமைகள் தினம்: வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்...

2024-12-10 01:55:54
news-image

பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது...

2024-12-10 01:48:28
news-image

யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர்...

2024-12-10 01:45:13
news-image

இன்று செல்வத்தை சந்திக்கிறார் கஜேந்திரகுமார்

2024-12-10 01:39:10
news-image

புதிய அரசாங்கமும் மனித உரிமைகள் விடயங்கள்...

2024-12-10 01:36:55