இந்தியாவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் ; கண்ணீர்ப் புகை, முள்வேலி, பொலிஸ் தடுப்பு - ஹரியானா எல்லையில் பதற்றம்

13 Feb, 2024 | 03:51 PM
image

புதுடில்லியை  நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில் ஹரியானா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டு வீசி தடுத்துள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பெப்ரவரி 13-ம் திகதி டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தன. 

அதற்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் திங்கட்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் பேரணியை பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (13) காலையில் தொடங்கினர்.

இப்பேரணி பஞ்சாப் - ஹரியானா ஹரியானா - டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய வேண்டும். விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க எல்லைப் பகுதிளில் சிமென்ட் தடுப்புகள் முள்படுக்கை முள்வேலி போன்றவற்றைக் கொண்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. 

விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து ஹரியானா எல்லையான ஷம்புவை அடைந்தது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர்.

.

இதனிடையே ஆம் ஆத்மி அரசு விவசாயிகளுடன் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளது. டெல்லி பவானா மைதானத்தை விவசாயிகளை கைது செய்து அடைப்பதற்கான தற்காலிக சிறையாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவை டெல்லி ஆம் ஆத்மி அரசு நிராகரித்துள்ளது.

இதுகுறித்த மத்திய அரசின் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் "விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு உரிமை வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “விவசாயிகள் நமது நாட்டு மக்களின் பசியாற்றுவோர். அவர்களை கைது செய்யும் நடைமுறை வெந்தப் புண்ணில் உப்பைத் தடவுவதற்குச் சமம். மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாங்களும் ஓர் அங்கமாக இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52