‘நாய் சேகர்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ என வணிக ரிதியிலான வெற்றிப்படங்களைக் கொடுத்து சந்தை மதிப்புக் கொண்ட நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வித்தைக்காரன்’ எனும் புதிய திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதியன்று படமாளிகைகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் - பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது படக்குழுவினர் பங்குபற்றினர்.
இயக்குநர் வெங்கி பேசுகையில்,“ சதீஷ் எனக்கு நண்பர். அவரை ஹீரோவாக வைத்து கதை எழுதவேண்டும் என்று தீர்மானித்தேன். என்னுடைய நண்பரான அபிலாசுடன் இணைந்து கதையை விவாதித்தபோது திருட்டு தொடர்பான கதையை எழுத முடிவு செய்தோம். எதில் திருடுவது கடினம் என கேட்டபோது, விமானநிலையத்தில் திருடுவது என்பது மிகக் கடினமானது என்றார்.அப்படியென்றால் நாயகன் விமான நிலையத்தில் கொள்ளையடிக்கிறான் என்பாக கதையை எழுதத் தொடங்கினோம். இப்படத்தின் கதையை எழுதியவுடன் சதீசிடமும், தயாரிப்பாளர் விஜய் பாண்டியிடம் சொன்னோம். அவர்களுக்கு பிடித்து போனது.
வித்தைக்காரன் உருவானது. நான் புதுமுகம். ஒளிப்பதிவாளர் புதுமுகம்,ஹீரோயின் புதுமுகம், இசையமைப்பாளர் புதுமுகம், படத்தொகுப்பாளரும் கிட்டத்தட்ட புதுமுகம் தான்... இப்படி புதுமுகங்கள் இணைந்து வித்தைக்காரனை உருவாக்கியிருக்கிறோம். திருட்டை மையப்படுத்தி, க்ரைம் திரில்லர் ஜேனரில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதில் ஹீரோ சதீஷ் சீரியசான கேரக்டரில் நடித்திருக்கிறார். வில்லனாக நடித்த மதுசூதன் ராவ் இப்படத்தில் காமெடி செய்திருக்கிறார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
நாயகன் சதீஷ் பேசுகையில்,“ நடிகர் விஜய் கட்சியைத் தொடங்குவதற்கு முன் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வித்தைக்காரன் படத்தின் இயக்குநரான வெங்கி என்னைப் போல் உங்களின் தீவிர ரசிகர் என சொன்னேன். அத்துடன் அவருக்கு இன்று பிறந்நாள் என்றும் சொன்னேன். உடனே அவர் போன் போட்டு வாழ்த்து சொல்விடலாம் என்றார். அதற்கு நான் அவன் நம்பமாட்டான். பேசாமல் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிடுங்கள் என்றேன். ரசிகர்களுக்காகவே எதையும் செய்யும் மனம் கொண்ட விஜய், வீடியோவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து பேசினார். விஜய் சினிமாவில் வெற்றிப் பெற்றதைப் போல் அரசியலிலும் வெற்றிப் பெற இறைவனை வேண்டுகிறேன்.
இந்த படத்தின் கதை எனக்கும், தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தது. மேஜிஸியனாக நடித்திருக்கிறேன். இதற்காக பயிற்சி பெற்றேன். இதில் நடன இயக்குநரான ஜப்பான் குமார் நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறார். சாம்ஸ்- மதுசூதன் ராவ் வித்தியாசமான காம்பினேசனில் காமெடி செய்திருக்கிறார்கள். அது ரசிகர்களை சிரிக்கவைக்கும்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM