நடிகர் நவீன் சந்திரா கதையின் நாயகனாக முதன்மையாக கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் லெவன் எனும் இன்வெஸ்டிகேட் திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை சிலம்பரசன், பி சி ஸ்ரீராம், கார்த்திக் சுப்புராஜ், அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் தேசிங் பெரியசாமி, நடிகர் சதீஷ், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பதினொரு திரையுலக பிரபலங்கள் இணைந்து அவர்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.
இயக்குநர் சுந்தர் சி உதவியாளரும்,அறிமுக இயக்குநருமான லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் லெவன். இதில் நவீன் சந்திரா, ரியா ஹரி, ‘விருமாண்டி' புகழ் அபிராமி, 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஏ ஆர். எண்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மன் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக்கும், மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் துப்பாக்கி மட்டுமே இடம்பெற்றிருப்பதால் ரசகர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி, வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM