விவசாயிகள் போராட்டம் – மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு.!

13 Feb, 2024 | 11:51 AM
image

இந்திய தலைநகரில் விவசாயிகள் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் மார்ச் 12ம் திகதிவரை புதுடில்லியில் 144 தடை உத்தரவை  அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

.பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் வரும் பிப்.13ம் தேதியான இன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தன. 

இதற்காக இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி  புறப்பட்டுள்ளனர்'

கடந்த 2021-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அம்மாநில தெருக்களில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதல் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பேரணியை எதிர்கொள்ள டெல்லி போலீசார் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேளாண் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை டெல்லியில் அமர்ந்து போராட்டம் நடத்துவார்கள் எனவும் தகவல் கிடைத்தது. 

இதையொட்டி டெல்லியில் குறிப்பாக வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-வது பிரிவின்படி தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது என டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு விவசாயிகள்அணி திரண்டால் அதைத் தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸார் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று பஞ்சாப் – ஹரியாணா எல்லைகளில் ‘டெல்லி சலோ பேரணி’யை முறியடிக்கும் விதமாக அம்பாலா ஜிந்த்இ ஃப்தேஹாபாத் போன்ற மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஹரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை ரத்து குறுஞ்செய்திகளுக்கான தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 12ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52