துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் வர்த்தகப் பிரதிநிதிகள் ஐவர் கொல்லப்பட்டனர்.

இஸ்தான்புல்லின் அத்தாடர்க் விமான நிலையத்தில் இருந்து ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் புறப்பட்ட இந்த ஹெலிகொப்டர் தொலைக்காட்சிக் கோபுரம் ஒன்றுடன் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகொப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அதிகாரிகள் ஐவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், விமானிகள் இருவர் பற்றி எவ்விதத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

கொல்லப்பட்டவர்களில் நால்வர் ரஷ்யர்கள் என்றும் தெரியவருகிறது.