புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் அறுவர் கைது !

13 Feb, 2024 | 11:30 AM
image

முல்லைத்தீவு 5 ஆம் வட்டாரம் இரணைபாலை புதுக்குடியிருப்பில் உள்ள தென்னந் தோட்டத்தில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தோண்டிய போது 06 பேர் நேற்று திங்கட்கிழமை (12) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின்படி, இரணைபாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 06 நபர்களை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.    

குறித்த  இடத்தில் தண்ணீர் எடுப்பதற்காகக் கட்டப்பட்ட கிணற்றின் அருகில் 03 அடி நீளமும் 06 அடி ஆழமும் கொண்ட குழி தோண்டிக்கொண்டிருந்த போது சந்தேக நபர்களும் அவர்களது சொத்துக்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நெடுங்கேணி, மதவாச்சி, பதவியா, தெய்நதர, ஹக்மான போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும்  இன்று செவ்வாய்க்கிழமை (13)  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 10:46:39
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40
news-image

கொழும்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகள் 97%...

2026-01-25 09:20:13
news-image

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே...

2026-01-25 09:19:51