கொழும்பு - கண்டி வீதியில் வரக்காப்பொல நகரில் போக்குவரத்தைக் கையாளும்போது பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீதியை செப்பனிடும் பணிக்காக வரகாப்பொல நகரின் ஒரு பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமை (12) மாலை குறித்த சந்தேக நபர்கள் பயணித்த பஸ் ஒன்று தவறான திசையில் சென்றபோது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அந்த பஸ்ஸை வீதியிலிருந்து அகற்றியதில் இவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஸ்ஸிலிருந்து இறங்கிய முன்னாள் இராணுவ மேஜர் உட்பட நால்வர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து, வரக்காபொல பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேக நபர்கள் நால்வரையும் கைதுசெய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM