இருதரப்பு மோதலில் இரு பொலிஸார் உட்பட நால்வர் காயம் : பாணந்துறையில் சம்பவம்!

Published By: Digital Desk 3

13 Feb, 2024 | 10:50 AM
image

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோது,  ஏற்பட்ட இரு தரப்பு மோதலையடுத்து காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக   பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பிரதேச போக்குவரத்து உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை வலான பாலத்துக்கு அருகில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நள்ளிரவு 12.10 மணியளவில் மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளிளை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இரு பொலிஸாரும் குறித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோதே இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கில் போதைப்­பொருள் பாவ­னைகள் அதி­க­ரிப்பு :...

2024-04-23 14:30:27
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 14:18:31