(ந.ஜெகதீஸ்)

Image result for வறட்சி virakesari

நாட்டில் தொடர்ந்து நிலவும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் தொகை மேலும் அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 20 ஆயிரத்து 461 குடும்பங்களை சேர்ந்த 12 இலட்சத்து 23 ஆயிரத்து 568 பேர் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பருவ மழை வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலேயே  வறட்சி நிலை தொடருகின்றது. இதன்காரணமாக பெரும்போகத்தில் கிடைக்கப்பெறும் 4 இலட்சத்து 35 ஆயிரம் மெற்றிக்டொண் நெல் அறுவடை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது