ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி -20 தொடர் ; இலங்கை குழாம் தெரிவு

13 Feb, 2024 | 09:10 AM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் பினுர பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

துஷ்மன்த சமீர உபாதைக்குள்ளாகி இருப்பதால் அவரது இடத்திற்கு பினுர பெர்னாண்டோ  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது உபாதைக்குள்ளான துஷ்மன்த சமீர இன்னும் பூரண குணமடையாததால் பினுர பெர்னாண்டோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பலம்வாய்ந்த அணியைக் கட்டியெழுப்புவதைக் குறிக்கோளாகக் கொண்டு  இலங்கை  குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச ரி20 அணிக்கு முழு நேரத் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் 2ஆவது ரி20 தொடர் இதுவாகும்.

அணிக்கு மீளழைக்கப்பட்டுள்ள பினுர பெர்னாண்டோ, கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய இருந்தார். ஆனால், அந்தப் போட்டியில் 5 பந்துகளை மாத்திரம் வீசிய நிலையில் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார்.

பினுர பெர்னாண்டோவுடன் உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சில் கலக்கிய டில்ஷான் மதுஷன்க, மதீஷ பத்திரண, நுவன் துஷார ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

சுழல்பந்துவிச்சில் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகிய வழமையான வீரர்களுடன் அக்கில தனஞ்சய மூன்றாவது சுழல்பந்து வீச்சாளராக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் சுழல்பந்துவீச்சிலும் ஈடுபடக்கூடியவர்கள்.

துடுப்பாட்ட வீரர்களாக பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, உதவி அணித் தலைவர் சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க ஆகியோர் இடம்பெறுகின்றனர். அவரக்ளில் மெத்யூஸ், ஷானக்க ஆகிய இருவரும் வெகப்பந்துவீச்சாளர்களாவும் பங்களிப்பு வழங்கவுள்ளனர்.

இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான 3 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகள் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 17, 19, 21ஆம் திகதிகளில் இரவு போட்டிகளாக மின்னொளியில் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் அரை இறுதியில்...

2024-07-11 12:01:24
news-image

கத்தாரிடம் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

2024-07-11 13:35:29
news-image

ஹேல்ஸ், பானுக்க அசத்தலான துடுப்பாட்டம்; கண்டி ...

2024-07-11 00:12:14
news-image

இலங்கையை 88-44 என்ற புள்ளிகள் கணக்கில்...

2024-07-10 23:56:19
news-image

ரைலி ரூசோவ் அபார சதம் குவிப்பு;...

2024-07-10 19:43:10
news-image

டேவிஸ் கிண்ண டென்னிஸ் 3ஆவது குழுவுக்கு...

2024-07-10 16:28:07
news-image

7ஆவது அகில இலங்கை வில்லாளர் போட்டியில்...

2024-07-10 16:27:20