(பா.ருத்ரகுமார்)

பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம் அளித்தார். 

குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டகுறித்த விசாரணை நான்கு மணிநேரத்துக்கு மேலாக நீடித்திருந்தது.

கடந்த மூன்றுவாரங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் அடுத்த மாதமளவில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில் ஜனாதிபதிஆணைக்குழவின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமிடம் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு முன்னர் இன்று  குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சாட்சியமளித்துள்ளார். இதுவே பிணை முறிவிவகாரம் தொடர்பில் அவர் அளிக்கும் முதலாவது சாட்சியமாகும்.

ஏற்கனவே மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, பொதுக்கடன் நிதியத்தின் பிரதான அத்தியட்சகர்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் என்போர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

குறித்த விசாரணை அறிக்கைகளை ஜனாதிபதியிடம் அடுத்த மாதமளவில் ஒப்படைக்கமுடியும் என பிணைமுறி தொடர்பாக ஆராயும் விசாரணைஆணைகக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.