வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

12 Feb, 2024 | 05:59 PM
image

‘எட்டுத்தோட்டாக்கள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி ‘ஜீவி’, ‘கேர் ஆஃப் காதல்’, ‘மெமோரீஸ்’, ‘பம்பர்’, ‘ரெட் சாண்டல்வுட்’ போன்ற தனித்துவமான கதைகளைத் தெரிவு செய்து, அதில் தனித்துவமாக நடித்து, ரசிகர்களிடம் நம்பிக்கையான நட்சத்திரம் எனும் நற்பெயரைச் சம்பாதித்திருக்கும் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆலன்’ படத்தின் படபிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக்குழுவினர் பிரத்யகே புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர். 

இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, ‘அருவி’ மதன்குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ரொமான்ஸ் டிராமா ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை 3 எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். சிவா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். விரைவில் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“ சிறிய வயதில் இருந்தே எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட நாயகன், தன்னை ஒரு எழுத்தாளராகக் கருதி கனவில் வாழ்ந்து வருகிறான். அவருடைய பதினைந்தாம் வயதில் நடக்கும் சம்பவத்திலிருந்து அவனுக்கு நாற்பது வயது நடைபெறும் வரையிலான வாழ்வியலை விவரிப்பது தான் இந்த ‘ஆலன்’ படத்தின் கதை. ஆலன் என்றால் படைப்பாளி என்று பொருள். இப்படத்தின் படபிடிப்பு  தமிழகம், காசி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது.” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கலைஞரான திலக் கதாநாயகனாக நடிக்கும்...

2024-03-01 18:30:54
news-image

ஜோஷ்வா இமைப்போல் காக்க - விமர்சனம்

2024-03-01 14:29:13
news-image

அதர்வா முரளியுடன் கரம் கோர்க்கும் அதிதி...

2024-03-01 14:38:08
news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய தமன்னாவின் 'ஒடேலா 2'

2024-03-01 14:07:38
news-image

சார்லி குணச்சித்திர வேடத்தில் கலக்கும் 'அரிமாபட்டி...

2024-02-29 19:08:58
news-image

பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நடிகர்...

2024-02-29 19:05:59
news-image

ஊர்வசி நடிக்கும் 'ஜே. பேபி' படத்தின்...

2024-02-29 19:02:14
news-image

விஜய் சேதுபதி வெளியிட்ட 'அக்காலி' பட...

2024-02-29 18:57:41
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-02-29 18:54:27
news-image

சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கும்...

2024-02-27 15:11:49
news-image

கல்லூரி இளைஞர்களுக்கான கதை 'போர்'

2024-02-27 14:10:05
news-image

மல்யுத்த வீரராக நிஹார் நடிக்கும் 'ரெக்கார்ட்...

2024-02-26 16:57:52