தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகைகளான சாவித்ரி பானுமதி ஆகியோரைப் போன்று அடுத்த தசாப்தத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரேவதி. தற்போது அவரைப் போன்ற தனித்துவமான நடிப்பின் அடையாளமாகத் திகழ்பவர் நடிகை கயல் ஆனந்தி. அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘வைட் ரோஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் வைட் ரோஸ். இதில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்க, அவருடன் ஆர் கே சுரேஷ், விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, சுதர்சன் எம் குமார் இசையமைத்திருக்கிறார். க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பூம்பாரை முருகன் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரஞ்சனி தயாரித்திருக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. உண்மை சம்பவங்களைத் தழுவித் தயாராகியிருக்கும் இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM