(என்.வீ.ஏ.)
முல்லைத்தீவு, வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தமிழ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கழகங்களுக்கு இடையிலான இருபாலாருக்குமான கபடி போட்டியில் முத்தமிழன் விளையாட்டுக் கழகமும் பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டுக் கழகமும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய கபடி சுற்றுப் போட்டி கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மின்னொளியில் நடத்தப்பட்டது.
சனிக்கிழமை முதல் சுற்றுப் போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகளும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டிகள் சம அளவில் மோதிக்கொள்ளப்பட்டதால் இரண்டு போட்டிகளும் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்றதுடன் இரசிகர்களைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தின.
ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் யோகபுரம் விளையாட்டுக் கழகத்தை 28 - 27 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முத்தமிழன் விளையாட்டுக் கழகம் வெற்றிகொண்டு சம்பியனானது.
பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் முத்தமிழன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய ஸ்கைலாப் விளையாட்டுக் கழகம் 13 - 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பயினானது.
சம்பியனான மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களுடன் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
இப் போட்டிக்கு புலம்பெயர் வாழ் அருண் பூரண அனுசரணை வழங்கியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM