இன்றைய சூழ்நிலையில் எம்மில் பலரும் நாளாந்தம் தங்களுடைய செலவுகளுக்காக பண வருவாயை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக விற்பனை நிலையங்களில் அல்லது சுய தொழில் அல்லது சிறு தொழில் செய்பவர்கள் தங்களுடைய விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களின் வருகைக்காகவும், அவர்கள் மூலமாக கிடைக்கும் லாபத்திற்காகவும் ஆவலுடன் காத்திருப்பர். இந்நிலையில் எம்மில் சிலர் ஜனவசியம் ஏற்பட்டு, தன வரவு அல்லது தன ஆகர்ஷணம் ஏற்படுவதற்காக சோதிட நிபுணர்களால் முன்மொழிக்கப்பட்ட மூலிகைகளை வாங்கி வைத்திருப்பர். ஆனால் அதனை பயன்படுத்துவதற்கான வழிமுறை குறித்து முறையாக தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்.
நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது ஆன்மீகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திலோ கிடைக்கும் குன்றிமணி மற்றும் குபேர சஞ்சீவினி வேர் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரை அல்லது மாலை வேளைகளில் கையில் வைத்துக்கொண்டு பின்வரும் மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.
மந்திரம்:
ஓம் நமோ பகவதே
லோக வசீகர மோகினி
ஓம் ஈம் ஶ்ரீம் ஸ்ரீ ஆதிலட்சுமி
சந்தான லட்சுமி
கஜ லட்சுமி
தன லட்சுமி
தான்ய லட்சுமி
விஜய லட்சுமி
வீர லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி
அஷ்ட லட்சுமி யோக
தயா மகா த்ருதய
பித்துடாய சித்திதா
சர்வலோக வசீகராய
சர்வ ராஜ வசீகராய
சர்வ ஜன வசீகராய
சர்வ காரிய சித்திதே
குரு குரு சர்வாதிஷ்டம்
ஜயி ஜயி சர்வ சௌபாக்யம்
குரு குரு ஓம் நமோ பகவதே
ஸ்ரீ மகாலட்சுமி கும்பட் ஸ்வாஹா!
இந்த மந்திரத்தை உச்சரித்துப் பிறகு அந்த தன ஆகர்சன மூலிகைக்கு பிரத்யேக தூப தீபத்தைக் காட்டி வணங்கினால் தன வரவு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
நீங்கள் வாங்கும் ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையத்தில் வாங்கும் குன்றிமணி மற்றும் குபேர சஞ்சீவினி வேர் ஆகியவற்றை ஏதேனும் ஓர் ஆலயத்தில் நடைபெறும் வேள்வியில் கொடுத்து அதற்கு சக்தி ஏற்றி வைத்திருத்தல் தனி சிறப்பு.
இந்த குன்றிமணி மற்றும் குபேர சஞ்சீவினி வேருடன் வெள்ளி காசுகளையும், வசதி இருப்பவர்கள் தங்க காசுகளையும் இணைத்து தங்களுடைய பணப்பெட்டியில் வைத்துக் கொண்டாலும் தன வசியம் ஏற்பட்டு பணவரவு வந்து கொண்டே இருக்கும்.
'ஓம் க்ரீம் வசி வசி தனம் பணம் தினம் தினம் ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வெள்ளிக்கிழமைகளில் இதற்கு பூஜை செய்தாலும் தன வசியம் உண்டாகும்.
உங்களிடம் உள்ள குபேர சஞ்சீவினி வேரை வெள்ளிக்கிழமைகளில் வெள்ளி கோப்பையிலோ அல்லது காப்பர் கோப்பையிலோ தண்ணீரை வைத்துக் கொண்டு அதில் இதனை போட்டு விட வேண்டும். அதன் தருணத்தில் தன வசியம் செய்வதற்கான மந்திரத்தை அல்லது மேற்சொன்ன மந்திரத்தை சொல்லி வர வேண்டும். அதன் பிறகு தண்ணீரில் மிதக்கும் அந்த வேரை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அதனைப் பார்த்து.. உங்களுக்கு தேவையான பணத்தை... செல்வத்தை சொல்லி அதை இந்த பிரபஞ்சம் வழங்க வேண்டும் என பிரார்த்தித்தால் உங்களுக்கான தன வரவு கிட்டும்.
இந்த தன ஆகர்ஷன வழிபாட்டு முறையை அனைவரும் பயன்படுத்தலாம். நட்சத்திரம், ராசி, யோகம், கரணம் என எந்த வேறுபாடும் இன்றி அனைவரும், அனைத்து சமயத்தினரும் பயன்படுத்தலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM