காதலன் மீது கத்திக்குத்து ; 19 வயது யுவதி கைது - கம்பளையில் சம்பவம்

12 Feb, 2024 | 05:32 PM
image

காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 19 வயதுடைய யுவதியாவார்.

இவர் 22 வயது இளைஞர் ஒருவருடன் ஒன்றரை வருட காலமாக காதலித்து வந்துள்ளார்.

இந்த இளைஞர் கடந்த சில நாட்களாக யுவதியுடனான காதலை முறித்துக் கொள்ள முயன்ற நிலையில் இது தொடர்பில் யுவதியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த யுவதி, இளைஞருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், யுவதி தனது சகோதரன் மற்றும் தாயுடன் இளைஞனை சந்திப்பதற்காக மீன் சந்தை ஒன்றிற்குள் சென்றிருந்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யுவதி இந்த இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட யுவதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-01-15 11:22:28
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-01-15 11:15:00
news-image

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல்...

2025-01-15 11:17:41
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜைகள்...

2025-01-15 11:13:51
news-image

தொடங்கொடையில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

2025-01-15 10:45:40
news-image

மதவாச்சி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்...

2025-01-15 11:16:45
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

2025-01-15 10:30:14
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் விபத்து ;...

2025-01-15 11:10:52
news-image

துர்நாற்றம் வீசும் பேர வாவியை சுத்தம்...

2025-01-15 09:59:06
news-image

யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!

2025-01-15 10:39:04
news-image

இன்றைய வானிலை

2025-01-15 06:15:45
news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46