ஆட்ட நேரத்தில் 3 பெனல்டிகளைப் புகுத்தி ஆசிய சம்பியனான கத்தார் ; இறுதியில் ஹெட் ட்ரிக் கோல் போட்ட முதல் வீரர் அவிவ்

12 Feb, 2024 | 05:17 PM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் கடந்த வார இறுதியில் நிறைவுக்கு வந்த ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் வரவேற்பு நாடான கத்தார் சம்பியனானது.

இந்த கிண்ணத்தை இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக வென்றதன் மூலம் ஆசிய கிண்ண வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் சம்பியனான ஐந்தாவது நாடாக கத்தார் பதிவானது.

ஜோர்தானுக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்ட நேரத்தில் அக்ரம் அவிவ் புகுத்திய 3  பெனல்டி  கோல்களின் உதவியுடன் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கத்தார் ஆசிய சம்பியனானது.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டி வரலாற்றில் ஹெட்-ட்ரிக் முறையில் கோல் போட்ட முதலாவது வீரர் என்ற சாதனையை அக்ரம் அவிவ் நிலைநாட்டினார்.

அப் போட்டியில் ஜோர்தான் வீரர்கள் தங்களது பெனல்டி எல்லைக்குள் வைத்து கத்தார் வீரர்களை வீழத்தியதால் கத்தாருக்கு பெனல்டிகள் வழங்கப்பட்டது. அதில் கடைசி இரண்டு பெனல்டிகள் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்புடன்  வழங்கப்பட்டது.

போட்டியின் 22, 73, 90+5ஆவது நிமிடங்களில் வழங்கப்பட்ட பெனல்டிகளை அக்ரம் அவிவ் இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தினார்.

ஜோர்தான் சார்பாக 67ஆவது நிமிடத்தில் யஸான் அலி நய்மாத் மிகவும் அருமையான கோல் ஒன்றைப் புகுத்தினார்.

ஆசிய கிண்ண சுற்றுப் போட்டியில் கத்தார் சார்பாக 7 போட்டிகளில் 8 கோல்களைப் போட்டதுடன் 2 கோல்களுக்கு உதவியமைக்காக சுற்றுப் போட்டியின் பெறுமதிவாய்ந்த வீரருக்கான விருது அக்ரம் அவிவுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் அதிக கோல்களைப் போட்டதற்கான விருதையும் அக்ரம் அவிவ் வென்றெடுத்தார்.

ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் இந்த இரண்டு விருதுகளை வென்ற மூன்றாவது வீரர் அவிவ் ஆவார்.

சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை கத்தார் கோல்காப்பாளர் மெஷால் பர்ஷாம் வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17
news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52