ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நடுவர்களிற்கான பரீட்சையிலும் மோசடி? மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்றார் நடுவர் ஒருவர்

Published By: Rajeeban

12 Feb, 2024 | 04:52 PM
image

கடந்த வருடம் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நடுவர்களிற்கான  பரீட்சையின் போது வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக நடுவர் ஒருவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடந்த வருடம் நடுவர்களை தரமுயர்த்துவதற்காக போட்டிப்பரீட்சையொன்றை நடத்தியது 100க்கும் அதிகமானவர்கள் இந்த பரீட்சைக்கு தோற்றினார்கள் என சந்தன கன்னங்கர என்ற நடுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் டெஸ்ட்நடுவர் ஒருவரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நடுவர் குழுவை சேர்ந்த ஒருவரும் வினாத்தாள்களை முன்கூட்டியே கசியவிட்டுள்ளனர்  போட்டிப்பரீட்சைக்கு ஒரு வார காலத்திற்கு முன்னர் 60 வினாக்கள் கொண்ட வினாத்தாளை பல நடுவர்களிற்கு இவர்கள் கசியவிட்டுள்ளனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்காரணமாக 25 நடுவர்கள் அந்த பரீட்சையில் சித்திபெற்று அடுத்த தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டனர் அதேவேளை 98 புள்ளிகளை பெற்ற சுமார் 30 பேர் தகுதிபெற தவறிவிட்டனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் உரிய நடைமுறைகள் மூலம் தகுதியான நடுவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் இந்த அநீதி குறித்து பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்பிரல் மாதத்தில் நடுவர்களிற்கான போட்டிப்பரீட்சை இடம்பெற்ற போதிலும் 8 மாதங்களின் பின்னரே முடிவுகள் வெளியாகின கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபைக்கும் இது தெரியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17
news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52