லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் நாகசேனை அகரகந்தை ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலமொன்று இன்று திங்கட்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளது.
நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பஸ்ஸில் பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலமொன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன், பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் தெரிய வந்துள்ளது. இருப்பினும் சடலமாக தண்ணீரில் கிடக்கும் பெண் தொடர்பில் தகவல் இதுவரையும் அடையாளம் காணப்படவில்லையென விசாரணைகளை ஆரம்பித்துள்ள லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கும் இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதன் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM