கார் விபத்தில் உலக மரதன் சாதனை நாயகன் கிப்டம் பலி

12 Feb, 2024 | 05:38 PM
image

(நெவில் அன்தனி)

உலக மரதன் ஓட்டப் போட்டியில் சாதனை நாயகனான கென்ய வீரர் கெல்வின் கிப்டம் கார் விபத்தில் பலியான சம்பவம் மெய்வல்லுநர் உலகத்தை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கென்யாவின் மேற்கு பகுதியில் 24 வயதான கிப்டம் செலுத்திக்கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி எறியப்பட்டு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கிப்டமின் பயிற்றுநர் ருவாண்டா தேசத்தைச் சேர்ந்த ஜேர்வாய்ஸ் ஹக்கிஸிமானாவும் பலியானார்.

கிப்டம், ஹக்கிஸிமானா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர்களுடன் காரில் பயணித்த பெண் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சிக்காகோ மரதனை 2 மணித்தியாலங்கள், 35 செக்கன்களில் நிறைவு செய்து புதிய உலக சாதனையை கிப்டம் நிலைநாட்டியிருந்தார்.

சக நாட்டவரான எலியுட் கிப்சோகேவுக்கு சொந்தமாக இருந்த முன்னைய சாதனையை 34 செக்கன்கள் வித்தியாசத்தில் கிப்டம் முறியடித்தே புதிய உலக சாதனையை நிலைநாட்டினார்.

செபெஸ்டியன் கோ ஆழ்ந்த அனுதாபம்

கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்றுநர் கெர்வைஸ் ஹக்கிசிமானா ஆகியோரின் திடீர் இழப்பை அறிந்து  அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளதாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் சங்கம்) தலைவர் செபெஸ்டின் கோ தெரிவித்துள்ளார்.

'அனைத்து உலக மெய்வல்லுநர்களின் சார்பாக அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், அணியினர் மற்றும் கென்ய நாட்டிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

'சிக்காகோ மரதன் ஓட்டப் போட்டியில் கெல்வின் நிலைநாட்டிய அசாத்திய உலக சாதனையை இந்த வார தொடக்கத்தில் தான், என்னால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க முடிந்தது.

'நினைத்துப்பார்க்க முடியாத ஆற்றல்களைக் கொண்ட மெய்வல்லுநரான கிப்டம், நம்பமுடியாத வரலாற்றை விட்டுச் செல்கிறார். அவரது மறைவு பெரிழப்பாகும்' என தனது இரங்கல் செய்தியில் செபெஸ்டியன் கோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் பல உலக மெய்வல்லுநர் அதிகாரிகள், கிப்டமின் நெருங்கிய விளையாட்டுத்துறை நண்பர்கள் அவரது மறைவு குறித்து கவலை வெளியிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17
news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52