புற்று நோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை இம்யூனோ தெரபி

12 Feb, 2024 | 04:40 PM
image

எம்மில் பலரும் தங்களது வாழ்க்கை நடைமுறையையும், உணவு முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால்.. மேலத்தேய நாட்டு மக்களை மட்டுமே பாதித்துக் கொண்டிருந்த பல வகையினதான புற்று நோய்கள் இன்று தெற்காசிய நாட்டினரான எம்மையும் தாக்குகிறது.

கடந்த தசாப்தத்தில் புற்று நோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்க இம்யூனோ தெரபி எனும் நவீன சிகிச்சை அறிமுகமானது. தற்போது வளர்ச்சி அடைந்து வரும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் இத்தகைய சிகிச்சை மேம்பட்டு புற்று நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால்... அந்த பாதிப்பு எங்கு ஏற்பட்டிருக்கிறது? என்பதைப் பொறுத்தும், புற்றுநோய் பாதிப்பின் நிலை குறித்தும் பிரத்யேக பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானித்து சத்திர சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி எனும் பிரத்யேக சிகிச்சை ஆகியவற்றினை  ஒருங்கிணைந்தோ அல்லது பிரத்யேகமாகவோ வழங்கி முழுமையான நிவாரணத்தை மருத்துவ நிபுணர்கள் வழங்குவர்.

இந்நிலையில் சில புற்று நோயாளிகளுக்கு குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் லிம்போமா எனப்படும் புற்றுநோய், சில வகையினதான தோல் புற்றுநோய் போன்றவற்றிற்கு மேற்கூறிய சிகிச்சைகளின் மூலம் முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. இவர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு பலனளித்து வரும் இம்யூனோ தெரபி எனும் நவீன சிகிச்சை தான் நிவாரணம் அளித்து வருகிறது.

கடந்த காலத்தில் புற்றுநோய் தாக்கம் அபாய கட்டத்தை எட்டிய பிறகு அவர்களின் வாழ்நாளை அதிகரிப்பதற்காக இத்தகைய இம்யூனோ தெரபி பரிசோதனை முறையில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களால் உருவாக்கப்படும் இத்தகைய பிரத்யேக மருந்தியல் சிகிச்சையில் மூலமாக தயாராகும் இம்யூனோ தெரபியை புற்றுநோய் கட்டுப்படுத்துவதற்கு வழங்கப்படுகிறது.

இம்யூனோ தெரபி என்பது பிரத்தியேக மருந்து. இதனை ஊசி மூலம் நோயாளிகளுக்கு செலுத்துவார்கள். இந்த சிகிச்சை ஒவ்வொரு நோயாளிகளுக்கும் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். மேலும் இந்த சிகிச்சையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சிலருக்கு மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.‌

இந்த சிகிச்சையின் போது எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக தூண்டப்பட்டு, புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயலாற்ற வைக்கிறது. அதன் பிறகு எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அதனை அழிக்கும்.

அதே தருணத்தில் அனைத்து வகையான புற்றுநோயாளிகளுக்கும் இத்தகைய சிகிச்சையை வழங்க இயலாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சத்திர சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய சிகிச்சைகளின் மூலமாக முழுமையான நிவாரணம் பெறாத நோயாளிகளுக்கு.. மீண்டும் அவர்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒரு முறை பரிசோதித்த பிறகு இத்தகைய இம்யூனோ தெரபி  சிகிச்சையை வழங்குகிறார்கள்.‌ அதே தருணத்தில் இத்தகைய சிகிச்சை தற்போதைய சூழலில் அதிக கட்டணத்தை கொண்டிருக்கிறது. ஏனெனில் இதற்கான மருத்துவ தொழில் நுட்பங்கள் மற்றும் மருந்துகள் மேலத்தேய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதால் இதன் சிகிச்சைக்கான செலவு அதிகம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

டொக்டர் சுரேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பியோஜெனிக் கிரானுலோமா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-02-15 18:38:50
news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14