கெஹலியவின் பெயரில் அமைந்த பாடசாலை : பெயரை மாற்றக் கோரி அரசாங்கத்துக்கு அழுத்தங்கள்

12 Feb, 2024 | 01:23 PM
image

சி.சி.என் 

ம்யூனோகுளோபின் மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் சுகாதார மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான கருத்துக்கள் நாட்டு மக்களிடையே வலுப்பெற்று வருகின்றன. சமூக ஊடகங்களில் ‘மக்களின் உயிர்களோடு விளையாடிய கொலைகாரருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்’ என்ற வகையில் பலரும் வெறுப்பு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கெஹலிய ரம்புக்வெல்லவை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இரகசியமாகச் சென்று சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி வருவதும் கசிந்துள்ளதால்  நாட்டு மக்கள் மொட்டு கட்சி உறுப்பினர்கள் மீது தமது கடும் விசனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடியாக சிறைச்சாலை வைத்தியசாலைக்குச் சென்றால் இந்த ஊழலில் அவருக்கும் பங்கிருக்குமோ என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தால் அவர் தனது சகாக்களை அனுப்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கெஹலியவின் சொந்த ஊரான  கண்டி மாவட்டத்தின் குண்டசாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப்பாடசாலைக்கு  சூட்டப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெலவின் பெயரை உடன் நீக்கக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகள் கல்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த பாடசாலையின் பெயர் டாக்டர் கெஹலிய ரம்புக்வெல ஆரம்ப பாடசாலை  (Dr. Keheliya Rambukwella Primary School') என்பதாகும். பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுவது குறித்து கடந்த காலங்களில் சர்ச்சைகள் எழுந்திருந்தன. மேலும் சமூகத்தில் பிரபலமானவர்கள்  உயிரோடு இருக்கும் போது பாடசாலைக்கோ அல்லது பாடசாலை கட்டடத்திற்கோ அவர்களின் பெயரை சூட்ட முடியாது என கல்வி அமைச்சானது 1996 ஆம் ஆண்டு சுற்று நிருபம் ஒன்றையும் அனுப்பியிருந்தது. 

எனினும் அந்த சுற்றுநிருபத்தை மீறியே மேற்படி குண்டசாலை பிரதேச பாடசாலைக்கு கெஹலியவின் பெயர் சூட்டப்பட்டது. மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலும் இவ்வாறு பல பாடசாலைகள் மற்றும் பாடசாலை கட்டடங்களுக்கு மகிந்தவின் பெயர்கள் சூட்டப்பட்டன. கெஹலிய ரம்புக்வெல கைது செய்யப்பட்டதன் பின்னர் கடந்த வாரம்  ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். 

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹலிய கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது பெயரில் பாடசாலை ஒன்று இருப்பது தவறான முன் உதாரணமாகும். அவர் சமூகத்துக்கு தவறான முன்னுதாரணமாக விளங்கிய காரணத்தினாலேயே சிறையில் அடைக்கப்பட்டார். ஆகவே இந்த பெயர் நீக்கப்டல் வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மகிந்த ராஜபக்ச காலத்தில் கல்லூரிகளுக்கு அவரது பெயரை சூட்டியதில் அப்போதைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன காரணமாக இருந்தார். ஆகவே இப்போது இந்த விவகாரம் குறித்து அரசாங்கமும் கல்வி அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

ஜோசப் ஸ்டாலினின் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்குப் பின்னரே கெஹலியவின் பெயரில் கண்டி குண்டசாலையில் ஒரு ஆரம்பப் பாடசாலை இருப்பது பலருக்கும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான பல கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஊழல்வாதிகளின் பெயர்களை பாடசாலைக்கு வைப்பதா என்றும் பாடசாலை ஒன்றுக்கு தனது பெயர் வைக்கப்பட்டப் பிறகும் கெஹலிய மிகவும் கவனமாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துறக்காத துறவிகள் பயிர்களை மேயும் பேராபத்து

2024-03-01 20:47:19
news-image

சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள...

2024-03-01 17:27:58
news-image

மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார...

2024-03-01 16:20:49
news-image

எதிர்மறையான சமாதானத்தில் இருந்து நேர்மறையான சமாதானத்துக்கு...

2024-03-01 15:04:45
news-image

விடியும் வேளையில் வரப்போகும் திருப்பங்கள்

2024-02-28 18:49:12
news-image

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான ஆலய வழிபாட்டுக்கும் ...

2024-02-28 18:04:16
news-image

பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி...

2024-02-28 13:52:19
news-image

பூமியின் நுரையீரலில் மிக பெரிய அனகொண்டா

2024-02-28 11:03:34
news-image

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

2024-02-27 14:27:33
news-image

இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

2024-02-27 13:50:28
news-image

இனி என்னை அப்பா என்று யார்...

2024-02-27 12:10:48
news-image

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை மோசடிகளால் அழிகிறதா?

2024-02-27 16:00:41