கம்பளை, புபுரஸ்ஸ பகுதியிலுள்ள உள்ள வீடொன்றில் மின்சார கட்டணத்தை செலுத்தாததால் மின்சார சபை ஊழியர்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தனது பிள்ளைகள் படிப்பதற்காக அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள முயன்ற தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கம்பளை , புபுரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த அழகன் கணேசன் என்ற 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவரது மனைவி பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடு சென்றுள்ள நிலையில் இவர் தனது பெண் பிள்ளை மற்றும் ஆண் பிள்ளைகள் இருவருடன் வசித்து வந்துள்ளார்.
வீட்டின் மின்சார கட்டணத்தை செலுத்த இவரிடம் 16 ஆயிரம் ரூபா பணம் இல்லாத நிலையில் மின்சார சபை ஊழியர்களால் குறித்த வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இவரது வீட்டில் மின்சார வசதிகள் காணப்படாத நிலையில் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர் தனது பிள்ளைகளின் படிப்பிற்காக அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள முயன்ற போதே மின்சாரம் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் இருந்த அக்கம்பக்கத்தினர் மின்சார இணைப்பை துண்டித்து இவரை காப்பாற்ற முயன்ற நிலையில் இவர் குடிக்க தண்ணீர் கேட்ட போது தண்ணீரை எடுத்து வருவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கம்பளை வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி மற்றும் கம்பளை புபுரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் மின்சார கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள மேலும் பதினைந்து வீடுகளில் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய வீடுகளுக்கு சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரது சடலம் மரண விசாரணைகளுக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM