(எம்.ஆர்.எம். வசீம்)
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியே அதனைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துவந்துள்ளது. என்றாலும் எமது வேலைத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு முன்னர் எங்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் இந்த முறை மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் நாடு பாதாளத்துக்கே சென்றுவிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை (11) யக்கல பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச நாடுகளின் உதவி இல்லாமல் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. அதனை விளங்கிக்கொண்டதாலே ஜனாதிபதி சர்வதேச நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு, அந்த நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் ஜனாதிபதியின் இந்த சர்வதேச விஜயங்களை எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அவர்களும் சர்வதேச நாடுகளைச் சுற்றிவர ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச நாடுகளின் உதவி இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதை தற்போதுதான் இவர்களுக்கு விளங்கி இருக்கிறது. என்றாலும் சர்வதேச நாட்டு தலைவர்களை நன்கு அறிந்த ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். உலக நாட்டுத் தலைவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அனுபவம் இருப்பதும் ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமாகும்.
மேலும் நாட்டின் பொருளாதாரம் மறை பொருளாதாரமாகும்போது எல்லா சந்தர்ப்பங்களிலும், ஐக்கிய தேசிய கட்சி முன்வந்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கும்போது, அதனை பூரணப்படுத்த முன்னர் தேர்தலின் மூலம் எம்மை வீட்டுக்கு அனுப்பினார்கள். 2001இல் நாட்டின் பொருளாதாரம் மறை பெருமானத்தில் இருக்கும்போது அதனைக் கட்டியெழுப்பி வரும்போது எம்மை வீட்டுக்கு அனுப்பினார்கள். 2015இலும் அதே நிலைமை ஏற்பட்டது.
இறுதியில் ஒரு ஆசனமும் இல்லாத நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சியை வீழ்ச்சியடையச் செய்தது. என்றாலும் மீண்டும் நாடு வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டை பொறுப்பேற்குமாறு தெரிவித்தனர். தற்போதும் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால் நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொண்டுருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினால், நாடு பாதாளத்துக்கே சென்றுவிடும்.
அதனால் நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை அவ்வாறே கொண்டுசெல்ல அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்குத் தேவையான தைரியத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM