(எம்.மனோசித்ரா)
முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காணி உறுதி வழங்கு 'உரித்து' (உருமய) வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் வினவிய போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். 'விவசாய நடவடிக்கைகளுக்காக நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட காணிகளுக்கான உரிமம் வழங்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் இந்த வேலைத்திட்டத்தோடு தொடர்புடையதல்ல.
இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு நிச்சயம் 7 பேர் காணி வழங்கப்படும். எவ்வாறிருப்பினும் விவசாய நடவடிக்கைகளுக்காக அரச காணிகளைப் பெற்றுக் கொண்ட சகலருக்கும் எவ்வித பேதமும் இன்றி உரிமம் வழங்கப்படும். வடக்கு, கிழக்கு மக்களும் இதில் உள்ளடங்குவர்.' என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
'உரித்து' திட்டத்தின் கீழ் 1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அனுமதிப்பத்திரம் மற்றும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச காணிகளின் முழு உரிமையையும் விவசாயிகளுக்கு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அதற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனாளிகளாக இனங்காணப்பட்டுள்ள இந்த உரித்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் கீழ் 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தம்புள்ளையில் இடம்பெற்றது.
எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி, உரிமத்துடன் வழங்கப்படும் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்பட்டதாகக் தெரியவில்லை. எனவே இதுகுறித்து வினவிய போது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் தெரிவிக்கையில்,
காணி உரிமம் வழங்கும் இந்த வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கதாகும். இந்த வேலைத்திட்டத்தை தேசிய மயப்படுத்தி 200 வருடங்களாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்குரிய காணி உரிமமும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும், காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மிக விரைவில் அதற்கான ஆக்க பூர்மான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையத்தில் காணப்படும் 10 பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கிய வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM