(எம்.மனோசித்ரா)
முன்னாள் இராணுவத்தளபதி தயா ரத்நாயக்க மீதுள்ள தனிப்பட்ட குரோதத்தை அரசியலில் காண்பிப்பது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இவ்வாறான காரணங்களுக்காக ஐக்கிய மக்கள் எவரும் இணைவதைத் தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
பீலட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் டுவிட்டரில் செய்துள்ள பதிவு தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெகு விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்னும் பலர் இணைவர். பில்ட் மாஷல் சரத் போன்சேகாவை கட்சியின் சிறந்த பதவியிலேயே நாம் வைத்திருக்கின்றோம். கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட பலர் இருக்கின்ற போதிலும், சரத் பொன்சேக்காவுக்கு தவிசாளர் பதவியை வழங்கினோம்.
தவிசாளர் என்ற ரீதியில் அவரது அரசியல் முதிர்ச்சியை இதனை விட சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இராணுவத்தில் பீல்ட் மார்ஷல் என்ற உயர் பதவி நிலைலையை அவர் அடைந்திருந்தாலும் அரசியலில் சாதாரண சிப்பாய்களை விட கீழ்தரமான முறையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். எனவே அரசியலுக்குள் இதனை விட முதிர்ச்சியுடன் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.
பரந்தளவில் புதிய குழுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய உள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியுடன் எவர் இணைவது தொடர்பிலும் நாம் கவலை கொள்ள மாட்டோம். ஊழல் மோசடி அற்ற எவரும் எம்முடன் இணையலாம். அதனை விடுத்து தமது அரசியல் பயணங்களுக்கு எவரேனும் தடையாக இருப்பார்கள் என கருதி அவர்கள் இணைவதில் தமக்கு விருப்பமில்லை எனக் கூறுவது அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பொருத்தமானதல்ல.
அரசியல் என வரும்போது தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்க கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM