பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசிரிகம பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது

பொகவந்தலாவயிலிருந்து கொழும்பிற்கு 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலை தூலை ஏற்றிச்சென்ற லொறியை நோர்வூட் பொலிஸார் நோர்வுட் நகரில் சோதனைக்குற்படுத்திய போது அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.

 சாரதியை பொலிஸார் கைது செய்யதவேளையில்,  லொறியின் நடத்துனர் பொலிஸாரின் கட்டளையை மீறி  லொறியை  அதிகவேகமாக  செலுத்திச் சென்ற  போதே லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நடத்துனர் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.