நற்பணி இலக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டுகுருந்த பந்தய நிகழ்வு

Published By: Priyatharshan

10 Mar, 2017 | 11:26 AM
image

நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற இரு மோட்டார் விளையாட்டுக் கழகங்களான ஆசிய மோட்டார் பந்தயக் கழகம் மற்றும் இலங்கை பந்தய வாகன ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் சங்கம் ஆகியன லயன்ஸ் கழகம் சர்வதேச மாவட்டம் 306 C1 உடன் ஒன்றிணைந்து மோட்டார் விளையாட்டு ஆர்வலர்களுக்காக மற்றுமொரு பாரிய பந்தய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

USHA Piston மற்றும் SPR Piston வலையங்களின் விநியோகத்தர்களான Abaya & Company நிறுவனத்தின் அணுசரனையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “Sri Lanka SUPER SERIES 2017” பந்தய நிகழ்வானது, கட்டுக்குருந்த பந்தயத் திடலில் 2017 மார்ச் 19 ஆம் திகதியன்று மு.ப 9.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

வறியோர், அடிமட்ட நிலையில் உள்ளவர்கள் மற்றும் வசதிகளற்றவர்களுக்கு உதவுவதற்காக லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 C1 ஆனது பல்வேறு சமூக சேவை செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக ஆண்டுதோறும் நிதி திரட்டும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த ஆண்டில், பேராதனை பல்கலைக்கழகம் தனது பராமரிப்பு தேவைகள் மற்றும் விவசாய பீட மாணவா்களின் பாவனைக்காக அகழ்வு இயந்திரம் (Back-hoe loader) ஒன்றை வழங்கி உதவுமாறு கேட்டிருந்தது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதித் துணை வேந்தரான பேராசிரியர் லக்ஸ்மன் விஜேவீர, முன்னாள் ஆளுனரும், தற்போது இலங்கை மாவட்டம் 306 C1 இன் முன்னாள் மாவட்ட ஆளுனர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். 15,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், 9 வேறுபட்ட கல்விப் பீடங்கள் மற்றும் 3 மேற்பட்டப்படிப்பு நிலையங்களுடன் இலங்கையிலுள்ள தங்கியிருந்து கல்வி கற்கக்கூடிய மிகப் பாரிய பல்கலைக்கழகமாகத் திகழுகின்ற பேராதனை பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி இப்பந்தயத்தின் மூலமாகத் திரட்டப்படவுள்ளது.

Lions Top Speed செயற்திட்டத்தின் தலைவரான லயன் ஹேஷான் பாதுக்க MJF, இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,

“கட்டுக்குருந்த பந்தய நிகழ்வு 2017 உடன் கைகோர்த்துள்ளமையையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். லயன்ஸ் கழகம் சர்வதேச மாவட்டம் 306 C1 ஆனது மக்களுக்கு இணையற்ற சேவைகளை வழங்குவதில் நூறு ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுவதுடன், அனர்த்த நிவாரணம், பார்வையின்மையைத்தடுத்தல், இளம் தலைமுறையை வலுவூட்டுதல், பட்டினிக்கு நிவாரணம், ஆரம்ப, இடை நிலை மற்றும் உயர் கல்வி நிலையங்களின் கல்வித் தொழிற்பாடுகளைப் பலப்படுத்துதல் போன்ற சமூகத்தின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“Sri Lanka Super Series 2017” பந்தயத் தொடரின் முதலாவது சுற்றாக இப்பந்தய நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கையில் இடம்பெறும் மோட்டார் விளையாட்டுக்களில் ‘மிகவும் பரபரப்பான’ பந்தயங்களுள் ஒன்றாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. 15 வேறுபட்ட பிரிவுகளில் தமது திறமைகளைக் காண்பிப்பதற்கு இலங்கையிலுள்ள மிகச் சிறந்த மோட்டார் கார் ஓட்டுனர்களும், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களும் தமக்கிடையில் மோதிக்கொள்ளவுள்ளனர்.

பிரபலமான 3500cc வரையான SL GT மற்றும் 1600cc வரையான SL-H ஆகிய பிரிவுகளும் பிரதானமாக இடம்பெறவுள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் மோதுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1000cc வரையான விசேட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 600cc வரையான மோட்டார் சைக்கிள்கள் மோதும் கவர்ச்சியான நிகழ்வுகளும் அடங்கியுள்ளன. இதற்குப் புறம்பாக வழமையான மோட்டார் கார் மற்றும் சைக்கிள் பந்தயங்களும் இடம்பெறவுள்ளன.

பந்தயம் இடம்பெறும் வேளையில் 2 நுழைவாயில்கள் உள்ளமையால், பார்வையாளர்கள் தாம் விரும்பும் வேளையில் வெளியில் செய்ய முடியும். டிக்கட்டுக்களை நுழைவாயில்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21