இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 42 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இணைய வானொலி சேவை அறிமுகம்

Published By: Digital Desk 3

11 Feb, 2024 | 09:55 AM
image

(சரண்யா பிரதாப்)

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 42ஆவது ஆண்டு வி ழாவை முன்னிட்டு இணைய வானொலி சேவை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல் உள்ளிட்ட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கை ரூபவாஹினிகூட்டுத்தாபனம் (SLRC) 1982ஆம் ஆண்டு பெப்ரவரி மா தம் 14ஆம் திகதி நிறுவப்பட்டு, 15ஆம் திகதி ஒலிபரப்பு சே வையை ஆரம்பித்தது.

42 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், தற்போது புதிய முயற்சிகளினூடாக மற்றுமொரு பரிமாணம் எடுக்கவுள்ளது.

இப்புதிய முயற்சிகளை தெளிவுபடுத்தல் தொடர்பான ஊடக சந்திப்பு வெள்ளிக்கிழமை (09) இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

அதில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க, பிரதி பணிப்பாளர் நாயகம் (பொறியியல்) கபில தசநாயக்க, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சதீஸ் நீலகண்டன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க கூறுகையில்,

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 42ஆவது அகவையை முன்னிட்டு மூன்று புதிய திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 13ஆம் திகதி மற்றும் 14ஆம் திகதி சமய அனுஷ்டானங்கள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், 14ஆம் திகதி பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வு இடம்பெறுவதற்கு முன்னர் இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரை முக்கிய 3 புதிய திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன.

அதற்கமைய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முதலாவது திட்டமாக சமூகப் பொறுப்பை முன்னிறுத்தும் “Trust and transparency” என்ற வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.

மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க விரும்புபவர்கள் அதற்கான நிதியை வழங்க முடியும். இதற்கு வங்கிக்கணக்கொன்று அறிமுகம் செய்யப்படும். அந்த வங்கிக்கணக்கு நிதி வழங்குபவர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் காணப்படும்.

இந்நிலையில், நிதி வழங்கியவர்களுக்கு குறித்த நிதியின் மூலம் புத்தகங்கள் யாருக்கு வழங்கப்பட்டது என்கிற விபரங்கள் தெரியப்படுத்தப்படும். 

மேலும், புத்தகங்களை வழங்க இலங்கை தபால் சேவை கட்டணமின்றி இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் தொடர்பில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும்.

இரண்டாவது திட்டம், தொலைக்காட்சியில் எழுத்து வடிவிலான சிறு விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ரூபவாஹினி தொலைக்காட்சித் திரையின் கீழ்ப் பகுதியில் எழுத்து வடிவில் சிறு விளம்பரங்கள் காட்டப்படும்.

லேக்கவுஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுடன் இணைந்து ரூபவாஹினி முன்னெடுக்கவுள்ளது.

மூன்றாவது திட்டம், மூன்று மொழிகளில் இணைய வானொலி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகில் எந்த இடத்திலிருந்தும் இணையத்தினூடாக வானொலியை கேட்டு ரசிக்க முடியும். https://rupavahini.lk/ என்ற இணையத்தளத்துக்கு செல்வதனூடான இணைய வானொலி சேவையை கேட்க முடியும். அதற்கான வசதிகள் கொண்ட செயலி இருக்கிறது.அதற்கு RU Radio என பெயரிடப்பட்டுள்ளது.

அத்தோடு, அரச ஊடகம் என்ற வகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உற்பத்திப் பொருளாதாரத்தில் சிறு முயற்சியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் Industry Sri Lanka வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு வியாழக்கிழமையும் 9.30 மணிக்குரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும், உற்பத்தியாளர்களுக்கு நேரடி வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க connect sri lanka என்ற நிகழ்ச்சி ரூபவாஹினி தொலைக்காட்சியில் பிரதி செவ்வாய்க்கிழமை 9.30 மணிக்கு தோறும் ஒளிபரப்பப்படுகிறது.

ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஜப்பானிய மொழி பயிற்சி ரூபவாஹினி தொலைக்காட்சியில் பிரதி திங்கட்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்குஒளிபரப்பப்படுகிறது. இப்பயிற்சிக்கான பரீட்சை 'சசகாவா' ஜப்பானிய மொழி நிலையத்தில் நடைபெறும்.

ஃப்ரீலான்ஸர்களுக்கு தொழில் முறையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் freelancer நிகழ்ச்சி ரூபவாஹினி தொலைக்காட்சியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

பரம்பரையாக தொழில் புரியும் மேசன், மின்சார வேலை செய்பவர்களுக்கு தொழில் துறையில் அங்கீகாரம் வழங்க Pro Plus என்ற வேலைத்திட்டத்தின் கீழ் NVQ 3 மற்றும் 4 கற்பிக்கப்படுகிறது.ரூபவாஹினி தொலைக்காட்சியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், மூன்று மொழிகளிலும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அத்தோடு, கிழக்குப் பகுதிகளில் நோன்பு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32