இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று (10) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் விழா மண்டபத்தில் ஆரம்பமானது.
இன்றைய நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையிலும் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விசேட பேச்சாளராக அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும், இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும், மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இன்றைய தினத்தில் கலை கலாசார பீடத்திலிருந்து 2016/2017ஆம் கல்வியாண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கைத்துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.எல்.ஏ. காதர் விருதை முகம்மது அமீர் மர்யம் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், 2016/2017ஆம் கல்வியாண்டில் தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதை முஹம்மட் அலி றீஷா நூர் சுவீகரித்தார்.
2016/2017ஆம் கல்வியாண்டில் ஹிந்து கலாசார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை வனிதா உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் சார்பில் 2016/2017ஆம் கல்வியாண்டில் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி ஞாபகார்த்த விருது நூறுல் ஸிபா ஜாபீறுக்கு வழங்கப்பட்டது.
2016/2017ஆம் கல்வியாண்டில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது செயினுல் ஆப்தீன் சாஜித் பெற்றுக்கொண்டார்.
மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவின் மூன்றாவது அமர்வில் விசேட பேச்சாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த கலந்துகொண்டு உரையாற்றினார்.
குறித்த அமர்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் சிபார்சின் கீழ் கலாநிதி திலகரத்ன ஆராச்சிகே பியசிறி கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து 2017/2018ஆம் கல்வியாண்டில் விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விருதை டினூபமா சமதி ஹேவாகே பெற்றுக்கொண்டார்.
2016/2017ஆம் கல்வியாண்டில் இரசாயன துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான் பாவா ஞாபகார்த்த விருது வெடநாயக்க பிலிப்புல்லைய உமேஷா சுபுன்சாரி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டது.
பொறியியல் பீடத்தில் 2016/2017ஆம் கல்வியாண்டில் சிறந்த மாணவருக்கான விருதை முகம்மது நுஷான் பாத்திமா நிகப்லா சுவீகரித்துக்கொண்டார்.
2016/2017ஆம் கல்வியாண்டில் சிவில் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது முகம்மது நுஷான் பாத்திமா நிகப்லாவுக்கே கிடைத்தது.
2016/2017ஆம் கல்வியாண்டில் எலக்ரிகல் அண்ட் எலக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது திசாநாயக்க முதியன்சேலாகே சத்துமினி சாரிக்க திசாநாயக்க பெற்றுக்கொண்டார்.
2016/2017ஆம் கல்வியாண்டில் மெகானிகல் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது ஷியாட் முபீஸ் சாஹிபுக்கு வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவின் நேரலை காட்சிகள் பல்கலைக்கழக ஊடகப்பிரிவின் நேரடி கண்காணிப்பில் இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட இணையத்தளத்தினூடாக பக்கத்தினூடாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும்.
நாளை 11ஆம் திகதி நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM