கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் நிகழ்வு

10 Feb, 2024 | 02:19 PM
image

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், இந்த பொங்கல் உற்சவத்தின்போது மேற்கொள்ளவேண்டிய போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் றூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர், மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர், மின்சார சபை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொங்கலுடன் தொடர்புடைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

இம்முறையும் பாரம்பரிய முறைப்படி, பண்டம் எடுக்கும் வைபவம் புத்தூர் சந்தி மீசாலையிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது. 

எதிர்வரும் பங்குனி மாதம் 17ஆம் திகதி விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, அன்று பிற்பகல் பண்ட வண்டில்கள் புத்தூர் சந்தி நோக்கிச் சென்று, பொங்கல் தினமான 24ஆம் திகதி பண்ட வண்டில்கள் பாரம்பரியமான முறையில் ஆலயத்தை வந்தடையும்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் 150வது ஆண்டு...

2024-02-27 17:14:10