“நெவத அவிதிமு” (மீண்டும் நடமாடுவோம்) என்ற திட்டத்தினூடாக சுயமாக இயங்குவதற்கான சுதந்திரத்தை வழங்கி ஸ்தாபகரின் மரபுரிமையை போற்ற “சன் மெட்ச்” உறுதி செய்கிறது.
இலங்கையின் முதலாவது மெழுகினால் தயாரிக்கப்பட்ட “சூரியா” வர்த்தக நாம தீக்குச்சிகள் உற்பத்தியாளரும், ஊதுபத்திகள், மெழுகுவர்த்திகள் மற்றும் தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பொருட்கள் உற்பத்தியாளரும், சந்தை முன்னோடியுமான சன் மெட்ச் கம்பனி, தனது ஸ்தாபகர் மறைந்த திரு. ரி.ஆர்.ஆர். ராஜன் அவர்களின் 21ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு, இரு தசாப்த காலமாக நிறுவனம் முன்னெடுத்து வரும் கூட்டாண்மை சமூக பொறுப்புச் செயற்பாடான “நெவத அவிதிமு” (மீண்டும் நடமாடுவோம்) எனும் திட்டத்தை தொடர்ந்திருந்தது.
“நெவத அவிதிமு” (மீண்டும் நடமாடுவோம்) திட்டம், குறைந்த வசதிகள் படைத்த அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை பெற்றுக் கொடுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
இந்த நிகழ்வில் வர்த்தக நாம தூதுவர் யஷோதா விமலதர்ம, சன் மெட்ச் நிறுவனத்தின் தவிசாளர் தேசமான்ய சூரி ராஜன் மற்றும் ஏனைய ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
மறைந்த திரு. ரி.ஆர்.ஆர். ராஜன், குண்டசாலை, மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையத்தை மறுசீரமைப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார். இலங்கை அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்ட நலன்புரி அமைப்பாக இந்த நிலையம் திகழ்வதுடன், நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு செயற்கை அவயவங்களை தயாரித்து வழங்கும் பணியை மேற்கொள்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM