இலங்கையின் இசைத்துறையை அதிரவைக்க காத்திருக்கும் சக்தி Crown உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் களம் பதித்துள்ளது.
கடந்த 25 வருடங்களாக ஊடக துறையில் புதிய பரிணாமத்தை உருவாக்கி சாதித்துக்கொண்டிருக்கும் சக்தி TV, வெறும் ஊடகமாக மட்டுமல்லாமல் நம் மக்களின் உணர்வுகளோடு கலந்து சேவைகள் பல செய்து மக்களின் சக்தியாக இல்லத்திரையில் வெற்றிநடைபோடுகிறது.
நம் நாட்டில் வாழும் மக்களிடம் மறைந்து இருந்த திறமைகளை அடையாளம் கண்டு அங்கீகாரம் கொடுத்து சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற பெருமையும் சக்தியையே சேரும்.
Shakthi Superstar, Shakthi Superstar Junior, இசை இளவரசர்கள் ,Global Superstar, Shakthi Superstar Premier Leak மற்றும் இசைமஹாயுத்தம் என பல திறமைத் தேடல்களை நடத்தி இன்று மேடைகளில் பாடும் பல பாடகர், பாடகிகளை அறிமுகப்படுத்திய சக்தி TV இன் மிக பிரம்மாண்டமான அடுத்த பயணம் ஆரம்பமாகியுள்ளது.
சர்வதேச தரத்தில், புதிய பரிணாமத்தில் அடுத்த தலைமுறைக்கான இசைப்பயணம் சக்தி Crown எனும் நாமத்துடன் அரங்கேற காத்திருக்கிறது.
இந்த சக்தி Crown எனும் இசைப்பயணம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆவது வாரத்தில் ஒளிபரப்பாகும் அதேவேளை, இது 43 தொடர்களை உள்ளடக்கியதுடன் இதில் 144 பேர் பங்கேற்கின்றனர்.
நாடுபூராகவும் சென்று, பாடல் பாடும் திறமைகளை அடையாளங்கண்டு அவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட மேடையில் பாடுவதற்கான வாய்ப்பை உருவாக்கி எதிர்கால இலங்கையின் இசை வாரிசுகளை அறிமுகப்படுத்த சக்தி TV தயாராகிறது.
ஆரம்ப அறிமுகச்சுற்றுக்களை தொடர்ந்து மேடைச்சுற்றுக்களில் போட்டியாளர்களை வழிநடத்த நம் நாட்டின் மூன்று திறமைமிக்க வழிகாட்டிகளான சாஹித்யா கஜமுகன், சந்துரு ராஜசூரியர் மற்றும் ஸ்ரீராம் சச்சி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதோடு, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த இசை வித்தகர்கள் வாகீசன் சிவநாதன், பானு தீபன் மற்றும் மதுஸ்ரீ ஆதித்தன் ஆகியோர் நடுவர்களாக கடமையாற்றவுள்ளனர்.
இளமை துள்ளும் இந்த திறமைத்தேடலை இளையவர்கள் மனங்கவர்ந்த AR யசோதரன் மற்றும் இளம் பாடகி மாதுவி ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சி வாரஇறுதி நாட்களில் இரவு 8.30மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இலங்கை இசைத் துறையில் அடுத்த தலைமுறைக்கான புதிய பயணத்தில் இணைந்து உலக தரம் வாய்ந்த பாடகர்களாக உங்கள் பயணத்தை ஆரம்பிக்குமாறு சக்தி TV கேட்டுக்கொண்டுள்ளது.
இசைப் பயணம் தொடர்பில் அறிவிக்கும் நிகழ்வு 9 ஆம் திகதி இரத்மலானையில் உள்ள ஸ்டெய்ன் கலையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த மகாராஜா குழுமப் பணிப்பாளர் ஷெவான் டனியல்,
“ மக்களின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. சக்தி Crown என்பது தமிழ் பேசும் மக்களுக்கான முதலாவது நிகழ்வாகும். இதில் இளம் திறமையானவர்கள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
“ சக்தி Crown என்பது முழுக்க முழுக்க தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி இங்குள்ள திறமையானவர்களை உலகத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் திறமையானவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் பூரண உத்துழைப்பு வழங்குமாறு” சக்தி TV அலைவரிசை பிரதானி எம். குலேந்திரன் தெரிவித்தார்.
வீ.பிரியதர்சன்
படங்கள் - ஜே. சுஜீவ குமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM