ஐ.எஸ்.ஸுக்கு எதிரான கூட்டுப் படைத் தாக்குதல்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்துப் பேச, 68 நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 22 மற்றும் 23ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், ஈராக் மற்றும் சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ்.ஸின் அரண்களை விரைவாக அழிப்பதற்காக மேற்படி 68 நாடுகளினதும் ஒத்துழைப்பு கோரப்படும் என்று தெரியவருகிறது.

மேலும், உலகின் சில பகுதிகளில் இயங்கும் ஐ.எஸ். இயக்கத்தின் கிளை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பு அமைப்புகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் என அந்த இயக்கத்தைப் பூண்டோடு அழிப்பதற்காக, உலகின் அனைத்து நாடுகளினது ஆதரவையும் பெற முயற்சியெடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டுப்படை அமைப்பின் இரண்டாவது கூட்டமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.