(நெவில் அன்தனி)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த சாதனைமிகு இரட்டைச் சதத்தின் உதவியுடன் 42 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
ஆப்கானிஸ்தான் சார்பாகவும் 6ஆவது விக்கெட்டில் இணைப்பாட்ட சாதனை நிலைநாட்டப்பட்டபோதிலும் இலங்கையின் வெற்றியை அவர்களால் தடுக்கமுடியாமல் போனது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களைக் குவித்தது.
பெத்தும் நிஸ்ஸன்க 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 210 ஓட்டங்களைக் குவித்தார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக முதலாவது இரட்டைச் சதத்தை விளாசியவர் என்ற சாதனையைப் படைத்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரட்டைச் சதம் குவித்த 10ஆவது வீரர் பெத்தும் நிஸ்ஸன்க ஆவார்.
சச்சின் டெண்டுல்கார்தான் முதன் முதலில் சரவ்தேச ஒருநாள் கிரிக்கேட் போட்டியில் இரட்டைச் சதம் குவித்தவர்.
அவரைத் தொடர்ந்து விரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கேல், மார்ட்டின் கப்டில், பக்கார் ஸமான், இஷான் கிஷான், ஷுப்மான் கில், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அவர்களுக்கு அடுத்து பெத்தும் நிஸ்ஸன்கவும் இதே வரிசையில் இரட்டைச் சதம் குவித்து அசத்தினர்.
ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் சிக்ஸ்கள் உட்பட 28 பவுண்டறிகள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக பவுண்டறிகள் குவித்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார்.
அத்துடன் சிக்ஸ்கள் உட்பட 28 பவுண்டறிகள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக பவுண்டறிகள் குவித்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார்.
அவிஷ்க பெர்னாண்டோவுடன் 158 பந்துகளில் 182 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த பெத்தும் நிஸ்ஸன்க, 3ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் மேலும் 120 ஓட்டங்களை சதீர சமரவிக்ரவுடன் பகிர்ந்தார்.
அவிஷ்க பெர்னாண்டோ 88 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
அணித் தலைவர் குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிக்கத் தவறி 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். சரித் அசலன்க 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் பரீத் அஹ்மத் 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதல் 5 விக்கெட்களை வெறும் 55 ஓட்டங்களுக்கு இழந்த ஆப்கானிஸ்தான் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், அஸமத்துல்லா ஓமர்ஸாய், மூத்த அனுபசாலி மொஹமத் நபி ஆகிய இருவரும அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 242 ஓட்டங்களைக் பகிர்ந்து இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.
மொஹமத் நபி தனது 2ஆவது சதத்தைக் குவித்ததுடன் அஸமத்துல்லா ஓமர்ஸாய் கன்னிச் சதத்தைப் பெற்றார்.
சகல நாடுகளுக்கும் எதிராக ஆப்கானிஸ்தானின் அவர்கள் இருவரும் அதிசிறந்த இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும். அத்துடன் ஆப்கானிஸ்தானின் 6ஆவது விக்கெட்டுக்கான அதி சிறந்த இணைப்பாட்டமாகவும் இது அமைந்தது.
மொஹமத் நபியின் விக்கெட்டை ப்ரமோத் மதுஷான் வீழ்த்தியதன் மூலம் இணைப்பாட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராமில் கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 256 ஓட்டங்களே ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.
மொஹமத் நபி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 130 பந்துகளில் 15 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 136 ஓட்டங்களைப் பெற்றார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
மொஹமத் நபிக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 115 பந்துகளில் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 149 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமலிருந்தார்.
பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 75 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM