ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைக்க கத்தார், ஜோர்தான் முயற்சி; நாளை இறுதிப் போட்டி

Published By: Vishnu

09 Feb, 2024 | 10:57 PM
image

(நெவில் அன்தனி)

தோஹா, லுசெய்ல் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (10) இரவு நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ணம் கத்தார் 2023 இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று சந்திக்கவுள்ள கத்தாரும் ஜோர்தானும் சம்பியன் பட்டத்தை சூடி வரலாறு படைக்க முயற்சிக்கவுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான கத்தார், கிண்ணத்தை தக்கவைக்க முயற்சிக்கவுள்ளது.

மறுபுறத்தில் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ள ஜோர்தான் முதல் முயற்சியிலேயே கிண்ணத்தை வென்ற வரலாறு படைக்க எண்ணியுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்றும் பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது.

கத்தார் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர்கள் இடமிருந்து வலமாக: அல்மோயிஸ் அலி, அக்ரம் அலி, ஹசன் அல் ஹைதோஸ்

ஏனெனில் ஆசிய கண்டத்தில் முதலாவது மகுடத்தை ஜோர்தானுக்கு பெற்றுக்கொடுக்க பயிற்றுநர் ஹீசெய்ன் அம்மூடா எதிர்பார்த்துள்ளார்.

அதேவேளை, கத்தார் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அதன் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் திகழ்கிறார்.

அத்துடன் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து 2 தடவைகள் சம்பியனான அணிகள் பட்டியலில் ஐந்தாவது நாடாக இணைய கத்தார் முயற்சிக்கவுள்ளது.

கத்தார் அணியினர்

ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் 16 அணிகள் சுற்று என அழைக்கப்படும் முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பலஸ்தீனத்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதியில் உஸ்பெகிஸ்தானை 1 (3) - 1 (2) என்ற பெனல்டி முறையிலும் அரை இறுதியில் ஈரானை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும்  கத்தார் வெற்றிகொண்டிருந்தது.

முன்னோடி கால் இறுதிப் போட்டியில் ஈராக்கை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதிப் போட்டியில் தஜிகிஸ்தானை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்திலும் அரை இறுதிப் போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது.

ஜோர்தான் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர் இடமிருந்து வலமாக யஸான் அல் நய்மாத், மூசா அல் தமாரி, யஸான் அல் அராப்

ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்திற்கு முன்னர் கத்தாருடன் விளையாடிய சிநேகபூர் போட்டியில் ஜோர்தன் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

ஆனால், நடப்பு சம்பியன் கத்தாரை அதன் சொந்த மண்ணில் குறிப்பாக அதன் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றிகொள்வது இலகுவானதல்ல என ஜோர்தான் பயிற்றுநர் அம்மூட்டா தெரிவித்தார்.

ஜோர்தான் அணியினர்

இதேவேளை, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள கத்தார், சிறந்த நிலையில் இருக்கிறது.

இம் முறை இறுதிப் போட்டியில் தனது அணி அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் என கத்தார் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20