நடிகைகளுக்கு பின்னால் ஜாதியின் பெயரை போடாதீர் : மலையாள நடிகை பார்வதி வேண்டுகோள்

Published By: Robert

07 Jan, 2016 | 12:49 PM
image

மலையாளத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதியாகும் நடிகைகள் பெரும்பாலும் தங்களின் பெயரின் பின்னார் மேனன், நாயர்  ( லட்சுமி மேனன், பார்வதி நாயர்)என்ற ஜாதியின் பெயரை இணைத்தே பெயரை சொல்வார்கள். ஆனால் மலையாள நடிகையான பார்வதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு தன்னுடைய பெயரின் பின்னால் ஜாதியின் பெயர் போடுவது பிடிக்காது என்றும், அதேப்போல் ஊடகங்கள் மலையாள நடிகைகளின் பெயர்களுக்கு பின்னர் அவர்களின் ஜாதியின் பெயரை போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் ஒரு படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்யும் போது எந்த மொழியில் ரீமேக் செய்தாலும், மூல கதையிலுள்ள கேரக்டர்களை நேட்டிவிட்டி என்ற பெயரில் மாற்றிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். இவரின் கோரிக்கையை சொல்லிவிட்டோம். கேட்க வேண்டியவர் கேட்டுக்கொண்டு திருந்தினால் சரி என்கிறார்கள் ரசிகர்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்