இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தி முற்றிலும் தவறானது.பொய்யானது. ஐக்கிய மக்கள் சக்திக்கு அவ்வாறான தேவைப்பாடு ஒன்று இல்லையென சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த இன்றைய(09) ஊடக சந்திப்பிலயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி தயார்.நாட்டுக்கு பங்களிக்க கூடியவர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து வருகின்றனர்.
திருடர்கள்,கொள்ளையர்கள், இனவாதிகள் கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.பணிகளைச் செய்யக்கூடிய படித்த, அனுபவமுள்ளவர்களையே இணைத்து வருகிறோம்.
சஜித் பிரேமதாச ஊழலுக்கும் மோசடிக்கும் எதிரானவர் என்பதாலும் மக்களுக்காக பணியாற்றுவதாலுமே சஜித் பிரேமதாசவை அனைவரும் ஆதரிக்கின்றனர்.
ஊழலுக்கும்,மோசடிக்கும் எதிராக குரல் கொடுக்கும் செயற்படும் ஒரு தலைவன், நாட்டின் தலைவராக வந்தால்,நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். 1994 இல் இருந்து இப்படியொரு தலைவர் நாட்டில் தோன்றவில்லை.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தி முற்றிலும் தவறானது.பொய்யானது. ஐக்கிய மக்கள் சக்திக்கு அவ்வாறான தேவைப்பாடு ஒன்று இல்லை.
இந்தியாவுடனும் இந்தியத் தலைவர்களுடனும் ஐக்கிய மக்கள் சக்தி நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அபிவிருத்தி காணும் இலங்கையை பார்க்கவே இந்தியா விரும்புகிறது.
இந்தியா வளர்ச்சியடைந்தால், பாகிஸ்தான் வளர்ச்சியடைந்தால் இலங்கைக்கும் நலன் கிட்டும்.அந்நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அது இலங்கையையும் பாதிக்கும்.
இலங்கையின் அபிவிருத்தி எமது நாட்டைப் பெரிதும் பாதிக்கின்றது. இந்த விடயத்தை ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நன்கு புரிந்து வைத்துள்ளது.
இந்தியா உட்பட அண்டை நாடுகள் ஐக்கிய மக்கள் சக்தியை பெரிதும் விரும்புகின்றன. ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இலங்கையை தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீட்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்ளப்படாதோர் வேறு கூட்டணியில் இணைந்து வருகின்றனர். இல்லையெனில் அவர்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது.
நாட்டில் உள்ள பல கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசித்தன.ஆனாலும் பல தரப்பினருக்கு நாங்கள் சாதகமான பதிலை வழங்கவில்லை.கட்சியின் கொள்கைகளுடன் உடன்படுபவர்கள் மட்டுமே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்காலத்தில் நாட்டில் மாபெரும் கூட்டணியாக மாறும்.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுமார் 25 முதல் 30 பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.மக்கள் விடுதலை முன்னனியின் உறுப்பினர்கள் சிலரும் எம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM