சசிகுமாரின் ‘ப்ரீடம்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

09 Feb, 2024 | 05:02 PM
image

‘அயோத்தி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமாரின் சந்தை மதிப்பு மீண்டும் அதிகரித்திருக்கிறது. இன்றும் கிராமத்து நாயகனாக வலம் வரும் சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ப்ரீடம்’ என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக்கை இரண்டு வித போஸ்டர்களாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார், ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீபிரசாத், கன்னட நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப் மற்றும் மலையாள முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளனர். 

‘கழுகு’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக  தயாராகும் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ‘ஜெய் பீம்’ புகழ் நடிகை லிஜோமோள் ஜோஸ் நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பீரியட் காலகட்ட படமாக தயாராகும் இந்த படத்தை விஜயா கணபதிஸ் பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் தயாரித்திருக்கிறார். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் டைட்டிலுடன் ‘ஓகஸ்ட் 14’ என இணைக்கப்பட்டிருப்பதால், இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்திற்கு முந்தைய நாள் நடைபெற்ற நிகழ்வின் உணர்வுபூர்வமான தொகுப்பாக படம் இருக்கும் என அவதானிக்கப்படுகிறது. இதில் சசிகுமாரின் அழுத்தமான தோற்றமும், நாயகி லிஜோவின் அர்த்தமுள்ள பார்வையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் வெளியாவதால், இதன் மூலம் பான் இந்திய நடிகராக சசிகுமார் உயர்கிறார். ‘கழுகு’ படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றியைத் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் சத்யசிவா, சசிகுமாருடன் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த ‘ப்ரீடம்’ வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச விருதை வென்ற 'பராரி '

2024-07-22 16:59:14
news-image

அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' அப்டேட்

2024-07-22 17:01:29
news-image

'வீராயி மக்கள்' படத்தின் இசை வெளியீடு

2024-07-22 17:10:14
news-image

இளசுகளின் ஓயாத உச்சரிப்பில் இடம் பிடித்த...

2024-07-22 17:12:12
news-image

'நாற்பது வயது குழந்தை நகுல்' -...

2024-07-22 15:37:05
news-image

கீர்த்தி சுரேஷ் கர்ஜிக்கும் 'இந்தி தெரியாது...

2024-07-22 15:08:43
news-image

நடுக்கடலில் தவிக்கும் 'போட்டில் தேவாவின் 'தகிட...

2024-07-21 15:11:17
news-image

சீயான் விக்ரமின் 'தங்கலான்' வெளியீட்டு திகதி...

2024-07-21 15:02:41
news-image

விக்ரமுடன் மோதும் பிரசாந்த்

2024-07-21 14:43:28
news-image

அஜித் குமாரின் 'விடா முயற்சி' அப்டேட்

2024-07-21 11:01:33
news-image

இசைப்புயல்' ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட...

2024-07-21 11:01:51
news-image

பாடகர் அறிவு எழுதி, பாடி, இசையமைத்திருக்கும்...

2024-07-19 17:36:22