எம்மில் சிலருக்கு தோல் சிவந்து காணப்படும். சிலருக்கு வயிற்றுபோக்குடன் கூடிய தாகமும், மயக்கம் மற்றும் நடுக்கமும் ஏற்படக்கூடும். சிலருக்கு தோலில் வெடிப்பு ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய கட்டிகள் பாதிப்பற்ற கட்டிகளாகவும், புற்றுநோய் கட்டிகளாகவும் மாறக்கூடும். இதற்கு தற்போது முழுமையாக நிவாரணமளிக்கும் சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
நியூரோஎண்டோகிரைன் கட்டி என்பது நியூரோஎண்டோகிரைன் எனும் சிறப்பு உயிரணுக்களில் உருவாகும் கட்டியாகும். இந்த செல்கள், நரம்பு செல்கள் மற்றும் ஹோர்மோன்களை உற்பத்தி செய்யக்கூடியவை. இதில் கட்டிகள் ஏற்படுவது அரிதானது. அதிலும் சிலருக்கு பினைன் எனப்படும் புற்றுநோயாக மாறாத கட்டியாகவும் ஏற்படக்கூடும். சிலருக்கும் மட்டும் இவை புற்றுநோய் கட்டியாக மாறும். இவை நுரையீரல், சிறுகுடல், மலக்குடல், கணையம் போன்ற உறுப்புகளில் பாதிப்பை உண்டாக்குகிறது.
இத்தகைய கட்டிகள் ஏற்பட்டால், நியூரோஎண்டோகிரைன் செல்கள் வழக்கத்தை விட கூடுதலான ஹோர்மோன்களை உற்பத்தி செய்யவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும். எந்த உறுப்பில் கட்டிகள் ஏற்படுகிறதோ.. அதைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறுபடும். சுவாசிப்பதில் சிரமம், வயிற்றுபோக்கு, உயர் குருதி அழுத்தம், அதீத சோர்வு, வயிற்று வலி, பாதம் மற்றும் கணுக்காலில் வீக்கம், சமச்சீரற்ற இரத்த சர்க்கரை அளவு, திடீரென்று எடை குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்,, உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும்.
இதன் போது நியூரோஎண்டோகிரைன் செல்கள் உற்பத்தி செய்யும் அதிகப்படியான ஹோர்மோனுக்கான பிரத்யேக பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, செல் பயாப்சி போன்ற பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். புற்றுநோயல்லாத கட்டி என்றால், அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி முழுமையான நிவாரணமளிப்பர். புற்றுநோய் கட்டியாக மாறியிருந்தால் சத்திர சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு தெரபி, டார்கெட்டட் தெரபி போன்ற சிகிச்சைகளின் மூலம் நிவாரணமளிப்பர்.
டொக்டர் ஆனந்தராஜா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM