சிட்டி லீக் யூசுப் கிண்ண 19இன் கீழ் கால்பந்தாட்டம் : ஆரம்பப் போட்டியில் சோண்டர்ஸ் - ப்ளக் ஸ்கொயா

09 Feb, 2024 | 02:57 PM
image

(நெவில் அன்தனி)

சிட்டி புட்போல் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யூசுப் கிண்ணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி மிகவும் பழைமைவாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துக்கும் ப்ளக் ஸ்கொயா கழகத்துக்கும் இடையிலான 'ஏ' குழு போட்டியுடன் நாளை சனிக்கிழமை (10) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

அப்போட்டியைத் தொடர்ந்து றினோன் கழகத்துக்கும் கொள்பிட்டி யுனைட்டட் கழகத்துக்கும் இடையிலான 'பி' குழு போட்டி நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறும்.

யூசுப் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி தொடர்பாக சிட்டி லீக் தலைவர் ஆர். புவனேந்திரன் (மத்தியில்) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியபோது எடுக்கப்பட்ட படம். படத்தில் சிட்டி லீக் செயலாளர் அன்டன் ஜோய், போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஷபீர் ரஹிம் ஆகியோரையும் பக்கத்தில் காணலாம்.

ஆர். புவனேந்திரன் தலைமை வகிக்கும் சிட்டி புட்போல் லீக் மூஏற்பாடு செய்துள்ள இந்த சுற்றுப் போட்டியில் 12 கழகங்களைச் சேர்ந்த 300 இளம் வீரர்கள் பங்குபற்றவுள்ளதுடன் அவர்கள் தத்தமது கழங்களின் வெற்றிக்காக முயற்சிக்கவுள்ளனர்.

2023ஆம் ஆண்டுக்கான இந்த சுற்றுப் போட்டி சீரற்ற கால நிலை காரணமாக பிற்போடப்பட்டு இந்த வருடம் நடத்தப்படுவதாக சிட்டி புட்போல் லீக்கின் நீண்டகாலத் தலைவர் ஆர். புவனேந்திரன் தெரிவித்தார்.

இந்த வருடப் போட்டிக்கு கலம்போ எவ்.சி. கழகத்தின் ஸ்தாபகத் தலைவரும் வர்த்தக கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவருமான சய்ப் யூசுப் அனுசரணை வழங்குவதால் அவரது பெயரில் இந்த சுற்றப் போட்டி நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டிக்கு அனுசரணை வழங்கும் தொழில் அதிபர் சய்ப் யூசுவ்

தொழில் அதிபரான சய்ப் யூசுப் கால்பந்தாட்டத்தில் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருகிறார். இளம் வீரர்களை ஊக்குவிப்பதில் அக்கறை செலுத்தி வரும் அவர் பல வீரர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார்.

சில வருடங்களுக்கு இளம் யுவதிகளை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் கால்பந்தாட்ட அணியையும் உருவாக்கிய சய்ப் யூசுப், வட பகுதியைச் சேர்ந்த யுவதிகளையும் கலம்போ எவ்.சி. மகளிர் அணியில் இணைத்துக்கொண்டுள்ளார்.

புட்சால் உட்பட பல்வேறு கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்திவந்துள்ள யூசுப் போன்றவர்களின் சேவை கால்பந்தாட்டத்துக்கு மிகவும் அவசியம் எனவும் புவனேந்திரன் கூறினார்.

இது இவ்வாறிருக்க, ஞாயிற்றுக்கிழமை மேலும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

யங் சில்வர் கழகத்துக்கும் கலம்போ சிட்டி எவ்.சி.க்கும் இடையிலான 'சி' குழு போட்டி பிற்பகல் 2 மணிக்கும் விக்டரி கழகத்துக்கும் மொரகஸ்முல்லை கழகத்துக்கும் இடையிலான போட்டி பிற்பகல் 4 மணிக்கும் ஆரம்பமாகும்.

(வைப்பகப் படம்)

இந்த சுற்றுப் போட்டியில் பாடசாலை மாணவர்கள் விளையாடுவதால் கழகங்களின் பிரதிநிதிகள் ஒழுக்கங்களைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என சிட்டி லீக் தலைவர் புவனேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

போட்டிகள் தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் போட்டி முடிவடைந்து 24 மணி நேரத்துக்குள் எழுத்துமூல ஆட்சேபனைகளை 3000 ரூபாய் கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வருடத்துக்குள் வேறு லீக்குகளில் விளையாடிய வீரர்கள் சிட்டி லீக் போட்டிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த செயலாளர் அன்டன் ஜோய், விதிகளை மீறும் வகையில் யாராவது வீரர் விளையாடினால் அந்த அணி போட்டியிலிருந்து நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சமகால தேசிய வீரர்கள், முன்னாள் தேசிய வீரர்கள் போட்டிகளை இலவசமாகக் கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவர். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட விசேட அடையாள அட்டையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என செயலாளர் கூறினார்.

சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் தலைவர்கள்

இந்த சுற்றுப் போட்டியில் ப்ளக் ஸ்கொயா, கலம்போ எவ்.சி., சோண்டர்ஸ் (ஏ குழு), கொள்பிட்டி யுனைட்டட், நடப்பு சம்பியன் ஜாவா லேன், றினோன் (குழு பி), கலம்போ சிட்டி எவ்.சி., மாளிகாவத்தை யூத், யங் சில்வர் (குழு சி), குறே, மொரகஸ்முல்லை, விக்டரி (குழு டி) ஆகிய 12 கழகங்கள் பங்குபற்றுகின்றன.

லீக் போட்டிகள் பெப்ரவரி 10, 11, 17, 24, 25, மார்ச் 2ஆம் திகதிகளிலும் கால் இறுதிப் போட்டிகள் மார்ச் 3, 6ஆம் திகதிகளிலும் அரை இறுதிகள் மார்ச் 7, 8ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி மார்ச் 10ஆம் திகதியும் நடைபெறும்.

லீக் மற்றும் கால் இறுதிப் போட்டிகள் 70 நிமிடங்களைக் கொண்டதாகவும் அரை இறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி என்பன 90 நிமிடங்களைக் கொண்டதாகவும் விளையாடப்படும் என போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஷபீர் ரஹிம் தெரிவித்தார்.

லீக் சுற்று நிறைவடைந்ததும் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பெறும் 8 அணிகள் கால் இறுதிகளில் விளையாட தகுதி பெறும்.

இந்த சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு யூசுப் கிண்ணத்துடன் 150,000 ரூபாய் பணப்பரிசும் தங்கப் பதக்கங்களும் 2ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணத்துடன் 100,000 ரூபாய் பணப்பரிசும் வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்படும்.

இதனை விட இறுதி ஆட்டநாயகன், சுற்றுப் போட்டி நாயகன், சிறந்த கோல் காப்பாளர் ஆகிய விருதுகள் வழங்கப்படும். நேர்த்தியான விளையாட்டுக்குரிய (Fair play) விருது வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை...

2024-09-18 16:51:08
news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41