நுகோகொட அநுல பாலர் பாடசாலை மற்றும் முன்பள்ளி பாடசாலை பயிற்சி நிலையத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 4 ஆம் திகதி தெஹிவளை சரணங்கர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு சிறிமாவே பண்டாரநாயக்க மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருமதி ருக்மணி காரியவசம் பிரதம அதிதியாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்  சுராஜ் ரந்தீவ் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

பாலர் பாடசாலையில் கற்கும் சிறார்களின் விளையாட்டுக்கள், உடற்பயிற்சி அப்பியாச நிகழ்வுகள் மற்றும் பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.