ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் கத்தார்

09 Feb, 2024 | 10:16 AM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் நடைபெற்றுவரும் AFC 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் விளையாட நடப்பு சம்பியனும் வரவேற்பு நாடுமான கத்தார் தகுதிபெற்றுள்ளது.

அல் ரய்யான், அல் துமாமா விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) மொத்தமாக 5 கோல்கள் போடப்பட்ட 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசை வெற்றிகொண்ட கத்தார் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2019இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் ஜப்பானை 3 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு கத்தார் ஆசிய சம்பியனாகி இருந்தது.

2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் மிகவும் பெறுமதிவாய்ந்த வீரர் விருதை வென்றவரும் அதிக கோல்களைப் போட்டவருமான அல்மோயிஸ் அலி, இரண்டவாது அரை   இறுதிப்   போட்டியின் 82ஆவது நிமிடத்தில் வெற்றிகோலை போட்டார்.

அதன் பின்னர் இந்தப் போட்டி உபாதையீடு நேரம் உட்பட 23 நிமிடங்கள் தொடர்ந்தபோதிலும் ஈரானினால் கோல் நிலையை சமப்படுத்த முடியாமல் போக கத்தார் இறுதியில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டி ஆரம்பித்து 4 நிமிடங்கள் ஆன நிலையில் ஈரான் முதலாவது கோலை போட்டது. த்ரோ இன் பந்தை சர்தார் அஸ்மூன் கரணம் அடித்து உதைத்து கோல் போட்டு ஈரானை முன்னிலையில் இட்டார்.

கத்தார் நீண்ட நேரம் பின்னிலையில் இருக்கவில்லை.

போட்டியின் 17ஆவது நிமிடத்தில் அக்ரம் அபிவ் பரிமாறிய பந்தை ஜசெம் கபிர் ஓங்கி உதைக்க, அது செய்யத் ஈஸாட்டோஹாலி மீது பட்டு கோலினுள் புகுந்தது.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது 43ஆவது நிமிடத்தில் அக்ரம் அஃபிவ் 2ஆவது கோலைப் போட்டு கத்தாரை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் 53ஆவது நிமிடத்தில் கத்தார் பின்கள வீரர் அஹ்மத் பாதியின் கையில் பந்து பட்டமை வீடியோ உதவி மத்தியஸ்தர் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஈரானுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை ஏ. ஜஹான்பக்ஷ் கோலினுள் புகுத்தி கோல நிலையை 2 - 2 என சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போட கடுமையாக பிரயத்தனம் எடுத்தன.

போட்டியின் 82ஆவது நிமிடத்தில் அப்துல்அஸிஸ் ஹாதெம் பரிமாறிய பந்தை அல்மோயிஸ் அலி கோலாக்கி கத்தாரை 3 - 2 என முன்னிலையில் இட்டார்.

அந்த கோலே இறுதியில் கத்தாரை இறுதிப் போட்டிக்கு இட்டுச் செல்லும் வெற்றி கோலாக அமைந்தது.

கத்தாருக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி லுசெய்ல் விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை (10) நடைபெறவுள்ளது. 

முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட...

2025-03-25 15:08:56
news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11