(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவான பொருளாதார வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன எனத் துறைமுகங்கள் விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்குச் சர்வதேசமும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் சர்வதேச ரீதியில் எமது நாடு மீதான நம்பிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது சர்வதேசத்துடன் இணைந்து செயல்படாமல் எம் போன்ற நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது அசௌகரியமான விடயமாகும்.
நாட்டின் சுற்றுலாத்துறை தற்போது சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.போராட்ட காலத்தில் 25 சுற்றுலாப் பயணிகள் கூட நாட்டுக்கு வராத நிலையில் தற்போது சுற்றுலாத்துறை சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குச் சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது. அந்த வகையில் ஒரு டொலர் கூட கையிருப்பில் இல்லாத இந்த நாட்டில் தற்போது 4.4 பில்லியன் டொலர்கள் கையிருப்பில் காணப்படுகின்றன. இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவான பொருளாதார வேலைத் திட்டத்தின் பயனாகும்,
அத்துடன் இந்த வருடம் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். அதனால் அதற்கு முகங்கொடுக்கத் தயாராகுங்கள். நாங்களும் தயாராகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM