பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா (07) திருமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் திணைக்கள பணிப்பாளருமான ச.நவநீதன் தலைமையில் நிகழ்த்தப்பட்ட இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் மாகாண பணிப்பாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
'எண்ணம்போல் வாழ்க்கை' இலக்கிய மன்றத்தின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலக்கிய மன்றத்தின் தலைவர் எழுத்தாளர் கனக. தீபகாந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
“கொத்துவேலி” நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை சமூக சேவைத் திணைக்கள மாகாண பணிப்பாளர் எழுத்தாளர் இரா.கி.இளங்குமுதனும், நூல் பற்றிய சிறப்பு நயவுரையை ஓய்வுநிலை அதிபர் கவிஞர் இரா.இரத்தினசிங்கமும் வழங்கினர்.
சிவபாதசுந்தரம் சுதாகரனின் “நீலையூர் சுதா” எனும் புனைபெயருடன் கிராமிய மணங்கமழும் வகையில் நாட்டுப்புற வாழ்கை, நிகழ்கால நாட்டு நடப்புக்கள் முதலான விடயங்களை உள்ளடக்கி, ஜனரஞ்சகமான படைப்பாக “கொத்துவேலி” நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
லலிதா சுதாகரனால் “கிடுகு வீடு” எனும் தலைப்பிலும் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்ட “நீலையூர் சுதா” பல ஆலய இறுவட்டுகளுக்காக பாடல்களையும் எழுதியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லையின் விவசாயக் கிராமமான பெரியநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட “கொத்துவேலி” நூலாசிரியரான பைந்தமிழ் சுடர் சுதாகரன் கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM