பி.வி.பி சினிமாஸ் என்ற பட நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படம் பெங்களூர் நாட்கள்.  இதன் டீஸர் வெளியிடு இன்று நடைபெற்றது. அதன் போது நடிகர்கள் ஆர்யா, பொபி சிம்ஹா, ராணா டகுபதி, நடிகைகள் ஸ்ரீதிவ்யா, பார்வதி உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபற்றினர். அப்போது கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஆர்யா, நடிகை திரிஷா எனக்கு தங்கை என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய ஆர்யா,‘வெற்றியோ தோல்வியோ என்னை வைத்து பிவிபி நிறுவனத்தார் தொடர்ந்து வாய்ப்பளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் கடந்த ஆண்டில் வெளியான என்னுடைய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். அதுவும் பெங்களூர் நாட்கள் மூலம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றார். 

பெங்களூர் நாட்கள் படத்தை தெலுங்கு இயக்குநர் பாஸ்கர் இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி மாதம் 12 ஆம் திகதியன்று வெளியாகிறது என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்