அம்புலன்ஸ் சைரனுக்கும் பொலிஸ் சைரனுக்கும் இடையேயான யுத்தம் தான் ஜெயம் ரவியின் ‘சைரன்’

08 Feb, 2024 | 04:40 PM
image

‘பொன்னியின் செல்வன்’ புகழ் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் 'சைரன்' திரைப்படம் பெப்ரவரி 16ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது. 

இதனைத் தொடர்ந்து படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஜெயம் ரவி அம்புலன்ஸ் வாகனத்தை இயக்கும் சாரதியாகவும், சிறையிலிருந்து வெளியே வரும் கைதியாகவும் இரு வேறு தோற்றத்தில் தோன்றுகிறார். 

மேலும், இப்படத்தில் அவருக்கு நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கீர்த்தி சுரேஷ் என இருவர் ஜோடிகளாக நடித்திருக்கிறார்கள். காதல், அப்பா பொண்ணு சென்டிமென்ட், கொமடி, எக்ஷன், எமோஷன் என கலந்துகட்டி இருப்பதால் முன்னோட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரை தவிர படக்குழுவினர் பங்குபற்றினர். 

இதன்போது நடிகர் ஜெயம் ரவி பேசுகையில்,

“எடிட்டர் ரூபன் மூலமாக இயக்குநர் அண்டனி பாக்யராஜ் அறிமுகமாகி, இப்படத்தின் கதையைச் சொன்னார். ஏற்கனவே எடிட்டர் ரூபன் மூலமாக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் அறிமுகமாகி, ‘அடங்க மறு’ என்ற வெற்றிப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கிய அனுபவம் இருந்ததால் கதையைக் கேட்டேன். நன்றாக இருந்தது. 

அம்புலன்ஸ் வாகனத்தை இயக்கும் சாரதிக்கும், பொலிஸ் சைரனுக்கும் இடையேயான யுத்தம் தான் இந்த படம். இந்த படத்தில் அப்பாவுக்கும் மகளுக்குமிடையேயான பாசத்தை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இது அனைவருக்கும் கனெக்ட் ஆகும் என நினைக்கிறேன். 

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அற்புதமான பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரின் நடிப்பும் அனைவருக்கும் பிடிக்கும். அனுபமா பரமேஸ்வரனும் நன்றாக நடித்திருக்கிறார். கோமாளி படத்தைப் போலவே இந்த படத்திலும் யோகி பாபு அழுத்தமான வேடத்தில் படம் முழுவதும் எம்முடன் இணைந்து பயணிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கெரக்டரும் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right