பக்தாத்தில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் - ஈரான் சார்பு குழுவின் முக்கிய தளபதி பலி

Published By: Rajeeban

08 Feb, 2024 | 10:48 AM
image

ஈராக் தலைநகரில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் ஈரான்சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கட்டாப் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஒருவரும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஆளில்லா விமானதாக்குதலிற்கு இலக்காகியது எனவும்  பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிராந்தியத்தில் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்திய தளபதியே ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஜோர்தானில் அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கும் இந்த குழுவிற்கும் தொடர்புள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

பக்தாத்தின் மஸ்டால் என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது பல வெடிப்புச்சத்தங்கள் கேட்டுள்ளன.

சனசந்தடி நிறைந்த வீதியில் கார் துல்லியமாக தாக்கப்பட்டது இதனால் கார் முற்றாக எரியுண்டுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

அபுபக்கிர் அல் சடாடி என்ற தளபதியே கொல்லப்பட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு பொறுப்பான தளபதியே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க மத்திய கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

பாரிய அழிவோ பொதுமக்களிற்கு உயிரிழப்போ ஏற்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம்தெரிவித்துள்ளது.

அந்த பகுதிக்கு பிபிசி செய்தியாளர்கள் சென்றவேளை அமெரிக்காவே பெரும் தீமை என மக்கள் கூச்சலிட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர்கள் அந்தவாகனத்தை நெருங்க முயன்றவேளை அங்கிருந்தவர்கள் பத்திரிகையாளர்களிற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து அவர்களை அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

நீங்கள் வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களே இதற்கு காரணம் என ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27